இன அழிப்பிற்கு நீதி கோரி இன்று வரை தொடரும் நீதிக்கான பயணம்!

1983 ஆம் ஆண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு வணக்க நிகழ்வும், இனவழிப்பினை உலகிற்கு எடுத்துக்கூறி நீதி கேட்போம் என்ற கருப்பொருளில் கண்காட்சியும் ஒன்றும் பிரித்தானியாவில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் இலக்கம் 10 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு பிற நாட்டு மக்களை கவரும் வகையில் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழரின் வரலாற்றினை திருப்பி போட்ட இந்த மிகத்துயர் மிக்க நாளினிலே நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் நினைவுப் பேருரையின் அறிக்கையினை இளையோர் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அகிலனால் வாசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கவிதைகள், பாடல்கள், நினைவு சுமந்த உரை என்பன இடம்பெற்றது. இறுதியாக பிரித்தானிய பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

 

-tamilwin.com

TAGS: