இறுதிப்போரின்போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு உரியவகையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு ஆராயவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வடக்கிலிருந்து படைமுகாம்கள் அகற்றப்படக்கூடாது எனவும் இடித்துரைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் பொலிஸார்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளது. பொலிஸார் ஊடாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பாதுகாப்பும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களால்தான் வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றமுடியாதுள்ளது. மேற்குலகமும் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். 30 வருடங்களாக நாட்டில் போர் நடைபெற்றது.
தற்போது ஐக்கியம் பற்றி பேசப்பட்டுவருகின்றது. எனவே, எடுத்த எடுப்பில் முகாம்களை அகற்றிவிடமுடியாது.
சுமார் 12 வரையான போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரியவகையில் புனர்வாழ்வளிக்கப்பட்டதா என்பதுபற்றி ஆராயவேண்டும்.
எனவே, பாதுகாப்பின் நிமித்தம் வடக்கில் முகாம்கள் இருக்கவேண்டும்” என்றார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
-tamilwin.com