யாழில் களமிறக்கப்படும் முப்படையினர்! கூட்டமைப்பு கடும் கண்டனம்

mavai-senathirajahயாழ். குடாநாட்டில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படையினரை பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, வடக்கில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படைகளை களமிறக்கப் போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “குடாநாட்டில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படைகளை பயன்படுத்துவதை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரும் நிர்வாகத் திறமையும், நேர்மைப் பண்புகளையும் கொண்ட சிறந்த பொலிஸாரை வடக்கு, கிழக்கில் கடமைகளில் ஈடுபடுத்த நியமிக்க வேண்டும்.

இவ்வாறான நியமனங்களின் மூலம் போதைப் பொருள் கடத்தல்களையும், வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.

இந்நிலையில், பொலிஸார் நேர்மையாகவும், திறமையாகவும் செயற்படும்போது பொதுமக்கள் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

 -tamilwin.com
TAGS: