வடகொரியா மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை சோதனையால் உலகநாடுகள் கடும் பீதியில் உள்ளன.
குறிப்பாக கூறவேண்டுமென்றால் வடகொரியா அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாக உள்ளது.
சமீபத்தில் முடிந்த வடகொரியாவின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் எந்த மூலையில் இருக்கும் இலக்கையும் துல்லிமாக தாக்கி அழிக்கக்கூடியது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப், தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் புதிய அணு ஆயுதச் சோதனை என்ற பெயரில் வடகொரியா தினம், தினம் புதுப்புது குடைச்சல்களை துவக்கிக் கொண்டே இருந்தால், அதை இனியும் அமெரிக்கா பொறுப்பதாக இல்லை.
உடனடியாகப் போரைத் துவக்கி உலக வரைபடத்தில் வட கொரியா என்ற ஒரு தேசத்தையே காணாமலாக்கி விடும் முடிவிலிருக்கிறது அமெரிக்கா என்று கூறியுள்ளார்.
மேலும் டிரம்ப் அமைச்சரவையின் சட்டமன்ற உறுப்பினராகத் திகழும் லின்ட்சே கிரஹாம் கூறுகையில், வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகளை மட்டுமல்ல வடகொரியாவையே முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விட முடியும், என லிண்ட்சே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-lankasri.com