அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை சீனாவிற்கு வழங்கியமை தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களின் தீவிர தன்மையை உணர்ந்து கொண்ட இந்திய மத்திய அரசாங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்த குறித்த முக்கியஸ்தர் இந்தியப் பிரதமரின் செய்தியை அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக அரசாங்கம் குழப்பம் அடைந்துள்ளதாகவும், இந்தியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தினால் பூகோள அரசியலில் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இந்தியா அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.
அத்துடன், இலங்கையில் மீண்டும் சீனா வலுவாக உருவெடுத்து வருவதை அவதானித்த அமெரிக்க இலங்கை அமைச்சர்கள் சிலரை சந்தித்து தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
தற்போது சீனாவுடன் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் சீன இராணுவ நடவடிக்கைகளுக்கான தடைகள் எந்தளவுக்கு சாத்தியப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளன.
குறித்த உடன்படிக்கையின் மூலம் சீருடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன பாதுகாப்பு படைகள் சீருடையில் செயற்படாவிட்டாலும் சிவில் உடையில் வந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.
எவ்வாறாயினும், இலங்கை மீண்டும் சீன ஆதரவிற்குள் செல்வதில் இந்தியாவுக்குள்ள அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையிலேயே, இந்திய மத்திய அரசாங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-tamilwin.com
சீனா இந்தியாவுக்கு அடிக்கும் பொது முதல் அடி தகர தமிழ் நட்டிட்கு (??) தான் ..இந்திய தேசியம் பேசும் தமிழ் அரசியல் வியாதிகள் எங்கு ஓடுவார்கள் என்று தெரியவில்லை ..ஈழ தமிழர்களுக்கு எதிராக நடந்ததட்கு பிச்சைக்கார இந்தியா வாங்கி கடட போகின்றது முறையாக ..2009 மே வரையில் சீனா துர் இருந்து வேடிக்கை பார்த்தது
என்ன அதிருப்தியில் இருந்து என்ன புடுங்க முடியும்? சுத்த கையால் ஆகாத வெங்காயம். தமிழ் நாட்டு மீனவர்கள் படும் தொல்லைக்கு -கொலைகளுக்கு என்ன பதில்? அந்த கச்ச தீவு எப்போது தமிழ் நாட்டுக்கு திரும்ப கிடைக்கும்?
மலேசியத் தமிழர்களின் கவனத்திற்கு – “துறைமுக அபிவிருத்தி திட்டத்தை சீனாவிற்கு வழங்கியதைத் தொடர்ந்து இந்தியா கடும் அதிருப்தியில்” – இதன் விளைவால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரை கொழும்புக்கு அனுப்பியுள்ளார்கள். இலங்கையிடம் இந்தியாக் காட்டும் இந்தக் கடுமையான அணுகுமுறை. வரவேற்கத் தக்கவொன்று. ஆனால் இதே இந்தியா அன்று இலங்கை ஈழத் தமிழர்களைக் கொன்றுக் குவித்தப் போது இந்தியா கொஞ்சமாவது தனது அதிருப்தியைத் தெரிவிக்க வில்லையே. கொஞ்சமும் கண்டுக் கொள்ளவில்லை. தமிழக மக்கள் கேட்டப் போது, இலங்கை இறையாண்மையுள்ள நாடாம். ஆதலால் இலங்கையில் நடந்தப் போர் இலங்கையின் உள்நாட்டு விவகாரமென்றார்கள்; அன்று இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களின் உணர்வை கொஞ்சமும் மதிக்க வில்லை. இந்த லட்சணத்தில் இந்தியாவும் இலங்கையும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் மற்ற நாடுகளால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள்; இந்த இருவரும் மதிப்பிற்கும் மரியாதைக்குரியவர்கள். உண்மையில் அன்று இந்த இருவரும் கூட்டுக் களவாணிகள் போல்தான் செயல்பட்டார்கள். அப்படிப் பார்த்தால் சீனா துறைமுகம் கட்டும் பணியும் இலங்கையின் உள்நாட்டு விவகாரம்தானே! .
எனக்கு தெரிந்தவரையில் வடக்கத்தியனுக்கு தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் அக்கறை கிடையாது-இது அக்காலத்தில் இருந்து நடக்கிறது. அதிலும் ஊழல்வாதிகள் ஆட்சியில் இருப்பது வடக்கத்தியனுக்கு மிகவும் பிடிக்கும்- காரணம் தான் எல்லாருக்கும் தெரியுமே. தற்போது தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது-அதுவே. ஒரே நாற்றம்.