தமிழன் என்ற வகையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் : இரா.சம்பந்தன்

தமிழன் என்ற வகையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் இந்த நாட்டில் வாழக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13ஆவது உலக தமிழாராச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வு இன்றைய தினம் யாழ்.நகரில் உள்ள பிரபல தனியார் விடுதியில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு ஈழ அண்ணல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் முதன்மை விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அதில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவத்துதையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974 ஆம் ஆண்டு பரபரப்பான சூழலில் தமிழாராச்சி மாநாடு யாழில் நடைபெற்றது. அதன்போது தான் தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

அதற்கமைய கடந்த 77 ஆம் ஆண்டு தமிழர் பண்பாட்டு இயக்க மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகள் பலவற்றிலும் இந்த மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தன.

கனடாவில் தான் இந்த இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. அந்த அமைப்பு அன்றிலிருந்து இன்று வரை திறம்படச் செயற்பட்டு வருகிறது.

இதற்கமைய 13 ஆவது மாநாட்டை இம் முறை யாழில் நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் இணைந்து ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடம் கலந்துக் கொண்டுள்ளீர்கள்.

எங்களுடைய இலக்கியம், கலை,கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கம் இவை எல்லாவற்றையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

எமது மக்களில் 50 வீதமான மக்கள் இன்றைக்கு இந்த நாட்டில் வாழவில்லை. ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் உலகத்தில் வெவ்வேறு நாடுகளில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக கலவரங்கள் காரணமாகவும் தாக்கப்பட்ட காரணத்தின் நிமித்தம் அந்த மக்கள் சொந்த வதிவிடங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததது.

இதனாலேயே வெளிநாடுகளிற்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் தான் தற்போது இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

அதாவது நாட்டில் புதிய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கி அதனூடாக நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு வெற்றி பெற வேண்டும்.

அதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. தமிழன் என்ற வகையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் கௌரவத்துவத்துடன் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அத்தகைய நிலைமையை அடையக் கூடிய கடமை எங்கள் எல்லலோருக்கும் இருக்கிறது. சமீபத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் என்னைச் சந்தித்தார்.

அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தேன். அந்த அமைச்சர் யாழ். வந்தும் முதலமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மேற்படி அமைச்சர் யாழ் வந்த போது யாழில் இருக்கின்ற அந்நாட்டின் முதல் வெளிவிவகார அமைச்சர் இராஐரட்னம் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டார்.

அவ்வாறு எமக்கு தொடர்புகள் உள்ளது. நங்கள் எல்லோரும் தமிழர்கள். நாங்கள் அநீதியாக எதனையும் கேட்கக் கூடாது.

ஆனால் நீதியாக நீதியின் அடிப்படையில் உரிமையின் அடிப்படையில் பிறப்புரிமையை நாங்கள் பெறவேண்டும்.

அந்த மக்களுக்கு இயன்ற உதவிகளைப நீங்கள் புரிய வேண்டும். இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடத்துகின்ற பண்பாட்ட இயக்கத்திற்கும் பல்கலைக்கழ கத்திற்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த மாநாடு தொடர்ந்து நடைபெற வேண்டும். சிறப்பாக நடைபெற வேண்டும். எங்கள் மத்தியில் இருக்கிற ஒற்றுமைய இன்னும் பலமடைய வேண்டும்.

எமது இனம் இந்த உலகத்தில் உயர்வின் பக்குவமான கௌரவமான இடத்தை அடைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில், யாழ்.இந்திய தூதுரகத்தின் துணை தூதுவர் எ.நடராஜன், அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், அ.க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

 

 

படங்கள் – Thamilin Tholan

-tamilwin.com

TAGS: