அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! யாழில் போராட்டம்

missingபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் யாழ். பஸ் நிலையத்திற்கு முன்னால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்புடன் மேலும் 5 அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், எஸ்.சைதன், கடந்த முறை வடமாகாண சபையில் போட்டியிட்ட தம்பிராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, மீனவ அமைப்பு மற்றும் அகில இலங்கை ஆசிரியர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

“மக்கள் நிலங்களில் இருந்து இராணுவமே வெளியேறு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தடை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், எங்கள் பிள்ளைகளை பயங்கரவாதி ஆக்காதே” போன்ற கோசங்களை எழுப்பிக் கொண்டு குறித்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.

அத்துடன் விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: