மஹிந்தவும் நானும் இணைந்து ஆட்சி!! சம்பந்தன்

எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது.

எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது

இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வினைச்சொற்கள் விபரித்தல் என்ற பெயரில் ஜுலம்பிடியே தேரரினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் இந்நாட்டின் தமிழ். சிங்கள மக்களுக்கான உறவுப்பாலமாக அமையும்.

பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு தமிழ் சிங்கள மக்களுக்கும் இடையில் இந்த புத்தகம் ஒரு உறவை ஏற்படுத்தும்.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு யாழ்ப்பாணத்தில் பிக்குமார்கள் பாடசாலைகளுக்கு சென்று சிங்களம் கற்பித்தார்கள்.

தமிழ் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றார்கள்.ஆனால் அரசாங்கத்தின் மொழிக்கொள்கை அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மாற்றமடைந்த காரணத்தினால் துரதிஷ்ட வசமாக மேற்படி சிங்கள மொழி கற்பிக்கும் செயற்பாடுகள் தடைபட்டுப் போயின.

வடக்கு கிழக்கில் பல அழிந்த பெளத்த விகாரையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கால கட்டத்தில் தமிழ் மக்கள் பெளத்தர்களில் குறிப்பிட்ட சிலர் பெளத்தர்களாகவும் இருந்தார்கள்.

அதனால் எம்மத்தியில் ஏற்பட்டுள்ள குரோதங்களை இலகுவாக நாம் நீக்கிகொள்ள முடியும்.

இந்த பணியை முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்சவும் நானும் இணைந்து நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என நாட்டிற்கான ஒரு பொதுப்பாதையை கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

-tamilwin.com

TAGS: