எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பல தாரம் மணந்த (போலிகாமி) வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டுமென, ‘பெர்காசா’ மலாய் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அலி, கிளாந்தான் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் பிரச்சனையைக் கவனிப்பதைவிட, தங்கள் குடும்பப் பிரச்சனைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிகிறது என இப்ராஹிம் அலி கூறியதாக, உதுசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
“தேர்தல் காலத்தின் போது, மக்கள் கட்சி மற்றும் அதன் சின்னத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல்; அந்த வேட்பாளரின் தனிப்பட்ட விஷயத்தையும் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் அக்கறை உள்ளவராக, மக்களுக்காக நேரத்தைத் தியாகம் செய்பவராக இருத்தல் அவசியம்”, என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட விஷயம் என்றால் ஒருவனுக்கும் தகுதி இல்லாமல் போய்விடும்! பெண்டாட்டி விஷயத்திலாவது விட்டுக் கொடுங்கள்! உங்களுக்கு இல்லை என்பதற்காக…….இப்படியா?
தரமான கருத்தொன்றை மொழிந்ததற்கு “தவளை”க்கு நன்றி.
அதெப்படிடா? உன் மதம்தான் அதை ஆதரிக்கின்றதே– அதை சாக்காக வைத்து தானே நாலு ,மேலும் நாலு வச்சிருக்கீங்க — திறமை இருந்தால் எல்லாமே முடியும்- திறமை திறன் பற்றி பேசுடா மடையா.
அடகூருகெட்ட கூமுட்ட உன்மதம்தான்
நாலுபொண்டாட்டியோட ஒரேவிட்டில்
வாழச்சொல்லுதே உனக்கு ஏன்எரியுது
முடிஞ்சால் நீயும் வெச்சிக்கோ!