அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் உலக சைவ இளைஞர் மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. நாளை மறுதினம் வரை மூன்று தினங்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
“தமிழ் எங்கள் மொழி.. சைவம் எங்கள் வழி” எனும் மகுட வாக்குடனும், “சைவத்தமிழ் மறுமலர்ச்சியில் இளைஞர்களின் பங்கும் பணியும்” எனும் தொனிப்பொருளிலும் இந்த மாநாடு யாழில் எழுச்சியுடன் இடம்பெறுகிறது.
குறித்த மாநாட்டின் ஆரம்ப நாளான இன்று காலை யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின்பக்கமாக அமைந்துள்ள மாநாட்டை ஒட்டிய சைவத்தமிழ் எழுச்சிப்பேரணி வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த எழுச்சிப் பேரணியில் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள், அன்பர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இன்று பிற்பகல் 04.30 மணியளவில் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இதன்போது குன்றக்குடிகளார் அரங்கு, ஆறுமுகநாவலர் அரங்கு, அறப்பணி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அரங்கு, யோகர் சுவாமி அரங்கு என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com
தமிழ் இளைஞர் அவர்தம் உண்மைச் சமய நெறிகளை அறிந்து வாழ்வது இக்காலக்கட்டத்தில் இன்றியமையாது. இலங்கை அதனை ஏற்று செய்வது வரவேற்புக்குரியது. சிவசிவ.