ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள முருக பக்தர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக ஆண்கள் மேலாடையின்றி ஆலயத்திற்குள் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அங்கு இடம்பெறும் பூஜைகளிலும் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com
https://youtu.be/fJ-z7U5AWuE?list=PLXDiYKtPlR7P-E5Cuoh3vo-MVC2hlE82k