சுமத்ரா தீவில் படகில் தத்தளித்த 30 இலங்கை அகதிகள் மீட்பு! நாடு கடத்தப்படும் அபாயம்

இந்தோனேசியாவில் சுமத்ரா பகுதியில் நியாஸ் தீவுப்பகுதி அருகே படகில் தத்தளித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்தது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தங்கள் பயணத்தை ஜூலை மாதமே தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் சென்ற படகின் இயந்திரம் பழுதானதால் நியாஸ் தீவுப்பகுதி அருகே குறித்த படகு தத்தளித்துள்ளது.

இதில் மீட்கப்பட்ட அனைவரும் குனுங் சிடோலி(Gunung Sitoli) என்ற துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட சுமத்ராவில் உள்ள சிபோல்கா (Sibolga) குடிவரவுத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகின்றது.

-tamilwin.com

TAGS: