அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் , ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தியின், சிரம்பான் அலுவலகத்தில் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர். அரசாங்கத்தைக் குறை சொல்வதை நிறுத்தி கொள்ளுமாறு, கழுத்தில் கத்தி வைத்து அவரை மிரட்டியுள்ளனர்.
இன்று மதியம், 3.50 மணியளவில் இச்சம்பவம் நடக்கையில் வேதமூர்த்தியின் மனைவியும் உடன் இருந்துள்ளார்.
வேதமூர்த்தியின் மனைவி அவரை ஒன்றும் செய்துவிட வேண்டாமென கெஞ்சியதாகவும், ஆனால், அவரும் தாக்கப்பட்டதாகவும் ஹிண்ட்ராப் வழக்குரைஞர் கார்த்திகேசன் சண்முகம் ஃப்.எம்.தி. இணையத்தளப் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.
“வேதாவின் மனைவியைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவரின் தங்கச் சங்கிலி மற்றும் கைத்தொலை பேசியையும் அவ்விருவரும் களவாடி சென்றனர்,” என கார்த்திகேசன் மேலும் கூறினார்.
மேலும், அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் ஒருவகை திராவகத்தையும் அவர்கள் வீசி சென்றதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கூட, இந்தத் திடீர் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என வேதமூர்த்தி கூறினார்.
அரசாங்க குண்டர் கும்பல் அராஜகம் ஆரம்பம்
இதெல்லாம் ம.இ.கா.வின் குண்டர்களுக்கு கை வந்த கலை! அவர்களுக்குப் பதவி கிடைக்க வேண்டுமென்றால் இதனை அவர்கள் செய்து தான் ஆக வேண்டும்! வேறு வழி?
1. நம்மில் இப்படிப் பட்ட கேடுகெட்ட ஜென்மங்களிருப்பதைக் கண்டு மிகவும் வெட்கப் படவும், வேதனையும் அடைய வேண்டியுள்ளது. தாக்கப் பட்டதும் கத்தியைக் காட்டி மிரட்டியதும், கைத்தொலைப் பேசியையும், தாளிச் சங்கிலியைக் களவாடியதும் கடுமையான குற்றச் செயல்கள்; அவர்கள் கைத்தொலைப் பேசியை மட்டும் திருடவில்லை; மற்றவர்களுக்குச் சொந்தமான அதிலுள்ள தகவல்களையும் திருடியுள்ளார்கள். அதை மறைக்கத்தான், தாங்கள் செய்தக் குற்றங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே வேண்டுமென்றே நல்லவர்கள் போல் வேடமிட்டு அரசைக் குறைச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதெல்லாம் முரண்பாடாகவுள்ளது. அப்படியென்றால் வந்தவர்கள் உண்மையில் திருடர்களா? திருட வந்தவர்கள் இப்படியெல்லாம் அரசைக் குறைச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரிக்கை விட மாட்டார்கள்; இதிலெதோவொரு அரசியல் உள்நோக்கமிருப்பதாகத் தெரிகின்றது; 2. இங்கே முரண்ப்பாடுகளும் குழப்பங்களும் காணப்படுவதாகத் தெரிகின்றது. திருட வந்தவர்கள் திருடுவதோடு சரி; அரசியல் நோக்கத்திற்காக எச்சரிக்கை செய்ய வந்தவர்கள் எச்சரிக்கையோடுப் போய் விடுவார்கள்; வன்முறை அரங்கேறினாலும் திருடுகின்ற அளவிற்குப் போக மாட்டார்கள். இங்கே இரண்டும் நடந்துள்ளது! 3. தமிழக அரசியல் பாணியில் அசிங்கமான அரசியல் கலாச்சாரம், அரங்கேறியுள்ளது’. அவர்களின் வேண்டாத அரசியல் கலாச்சாரம், நமக்கு வேண்டாம். இதெல்லாம் நம் கலாச்சாரமில்லை; 4. இந்த அசம்பாவிதம் நாளை நமக்கோ அல்லது நம் அன்பிற்குரியவர்களுக்கோ நடந்தாலும் நடக்கலாம்; இதைத் தடுக்க வேண்டும்; நாமெல்லோரும் ஒருமனதாக இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இனிமேலாவது நம்மிடையே ஒற்றுமை வளரட்டும். இனிமேலாவது நம் மக்களின் நலன்கள் கருதி நம்மிடையே ஒற்றுமைகள் வலுப் பெற வேண்டும்!
மனம் தளர வேண்டாம்
இது
போன்ற
சம்பவங்கள்…..
மேடை
போட்டு
அரங்கேறிய
வைகல்
நிறைய
உண்டு
உதாரணமாக
மைக்க
ஹோல்டிங்ஸ்
மக்கள்
முன்னாலே
செய்தார்கள் ….அடித்தார்கள்
. உங்கள்
அலுவகத்தில்
சி
சி
கேமெரா
இருக்குமே. நீங்கள்
ஒரு வக்கீல்
உங்களுக்கு
தெரியாத
என்ன. திருடன்
யார்
…வந்தவர்கள்
திருடர்கள…அள்ளது
உங்களை
மிரட்ட
வந்தார்களா
என்று
….ஒரு நல்ல
இருப்பதற்கு
அதுவும்
தமிழர்களுக்கு
.
தற்போது நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் உலக அரங்கில் கேள்விக்குறியாகி வருகின்றது . பணம் உள்ளவர்கள் எதிலும் வல்லவராக நாட்டில் வளம் வரலாம் என்ற நிலைமை முழுமையாக அரங்கேறி வருகுன்றன . பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறைவன் முன் நின்று மனதார பிராத்தனை செய்யவும் , தவறு செய்தவன் நிட்சயமாக தண்டிக்கப்படுவான் , அதனை கண்டு மற்ற கயவனும் தவறு செய்ய தயங்குவான் , தவறு செய்ய மாட்டான் .
சின்ன சந்தேகம். 1. இந்த சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டதா? 2. எரித்திராவகம் (sulphuric acid) துர்நாற்றம் வீசுவதில்லை. 3. எரித்திராவகம், அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதை வைத்திருக்க லைசென்ஸ் பெற்றிருக்கவேண்டும். 4. மேலும் இவரை போய் மிரட்டுவதற்கு,இவர் எதிர்தரப்பில் பெரியதொரு கொள்கை வீரரும் அல்ல, டேவிட்,பட்டு, கி,ராமன், ரமேசன், சிம்மாதிரி, பாக்கியநாதன், குப்புசாமி,ஜெகந்நாதன், போன்ற எதிர்க்கட்சி சிங்கங்களின் பட்டியலில் கூட இவரை சேர்க்க முடியாது. அவர்களுக்கே எவ்வித மிரட்டலும் வந்ததில்லை.. கால் தூசிக்கும் லாயக்கில்லாத இந்த முன்னாள் ஆளும்தரப்பு துணை அமைச்சருக்கு மிரட்டலாம்.
நமக்கு குரல் கொடுக்கும் வேத அவருக்கு நமது ஆதரவு தரா வேண்டும்
அது அவரின் அலுவலகம். எனவே அங்கே CCTV-Camera- இருந்திருக்கும். அப்படியானால் கைவரிசை காட்டிய அந்த களவானிகளின் வீடியோவை அல்லது புகைப்படங்களை வெளியிட்டால் அவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்துவிடலாம்.
மகாதீர் கருத்தரங்கில் வன்செயல்கள்,
வேதமூர்த்தியின் அலுவலகத்தில் நுழைந்து தாக்குதல்கள்
நஜிப்பின் அடிதடி அரசியல் அமோகமாக அரங்கேறி விட்டது.
இனி நாடாளுமன்றத்திற்கும் நஜிப் தனது அடிதடி அரசியலை விரிவு படுத்துவதுடன், என்னையும் அரசாங்கத்தையும் எதிர்கட்சிகள் எதிர்த்தால் இனி “தாக்கல்தான்” என தனக்கே உரிய மிரட்டும் பாணியில் எச்சரிக்கை விடுவார்.
5 HINDRAF முன்னோடிகளையும் அழைத்து பேசுங்கள் ! கட்டாயம் உதய குமார் , உங்களது சகோதரர் இருக்க வேண்டும் ! இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள் ! ஆப்பு இந்தியர்களினால் தான் வைக்க முடியும் என்று 22 வருடம் மலேஷியாவை ஆண்ட ஒரு இந்தியன் நினைக்கிறான் என்றால் , அதில் உண்மை இருக்கிறது ! ஒன்று கூடி உரை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாத்துங்கள் … உங்கள் தவறுகள் எல்லாம் மறக்கப்படும் … மறைக்கபடும் வரலாட்ரில் ! ஆனால் உண்மையில்லாமல் எந்த ஒரு காயையும் நகத்தாதீர்கள் !