விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்றும் எனக்குத் தெரியவில்லை.
எனினும், பிரபாகரனின் 12 வயது மகன், சிறிலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம்.
இது முற்றிலும், மிக மோசமான பொறுப்பற்ற, தீய செயல். இந்த விடயத்தில் சிறிலங்கா படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஸ்டம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
-puthinappalakai.net
புத்த மத ராணுவ வெறியர்களின் கொலை– புத்த மத போதனையா இது? இந்துக்கள் நாம் புத்தரை நம் கோவில்களில் வைத்து வணங்குகின்றோம் ஆனால் அந்த நாதாரிகள் இந்து மதத்தை பேய்களின் மதம் என்றும் பலவாறு இழித்து பேசுகின்றனர்– ஹொங்கொங்கில் உள்ள பெரிய புத்தர் சிலை கோவிலுக்கு போய் பாருங்கள் இந்துக்கள் எப்படி கேவலப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரியும்.
புத்தம் சரணம் கச்சாமி,இலங்கையில் ஈழ மக்களின் ரத்தம் சரணம் கச்சாமி !!
எரிக் சொல்காய்ம் எதனை பெயரின் சாவுக்கு காரணமாக இருந்தார் ?
யாசிர் அரபாத் …புலித்தலைமை மறைவுக்கு நீயே காரணம் …இன்று ஒருவரும் நோர்வே நாடடை நம்ப தயார் இல்லை ,,
பிள்ளையார் படம் இல்லாத சிங்கள வீடு கிடையாது .மாலையில் பிள்ளையார் படத்திட்க்கு விளக்கு ஏற்றுவது சிங்களவர்களுக்கு ஒரு கடமை .அம்மன் கோயில் இல்லாத சிங்கள கிராமம் கிடையாது ….இந்து தெய்வங்கள் இல்லாத புத்த கோயில் கள் கிடையாது …உண்மையில் ..பண்டைய காலத்தில் சிங்கள மன்னர்கள் ..தமிழா நாட்டு இளவரசியை மணப்பது வழக்கம் ..ஆக கணவர் புத்தரை வழிபடும்போது ..மனைவி இந்து கடவுள்களை வழிபட இந்த ஏற்பாடு