டிஏபி தலைவர் ஒருவர், பினாங்கு சுரங்கப்பாதை திட்டம் புத்ரா ஜெயாவின் எம்ஆர்டி திட்டம்போல் அல்லாமல் பொது டெண்டருக்கு விடப்பட்டது என்றுரைத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
நஜிப் சுரங்கப்பாதை அமைப்பதற்கான செலவு அதிகம் என்று குறைகூறியிருப்பதை டிஏபி -இன் தேசிய விளமபரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா அது ஒரு ”வெட்கக்கேடான” குற்றச்சாட்டு என்றார்.
“இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. பினாங்கில் சுரங்கப்பாதையும் நெடுஞ்சாலைகளும் அமைக்கும் குத்தகை பொது டெண்டர்வழி கொடுக்கப்பட்டது.
“மறுபுறம், எம்ஆர்டி-க்கான ஏறத்தாழ ரிம30பில்லியன் குத்தகை, பொது டெண்டருக்கு விடப்படாமல் , நேரடிப் பேச்சுக்கள்வழி கமுடாவுக்குக் கொடுக்கப்பட்டது”, என புவா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“நாட்டின் 60ஆம் ஆண்டு சுத்ந்திரத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் நேர்மையற்ற ஒரு பிரதமால் ஆளப்படுவதை எண்ணி உண்மையிலேயே வெட்கப்படுகிறார்கள்”, என்றாரவர்.
“டெண்டர்” வழி என்றால் சிறிய “கேக்” துண்டுதான் கிடைக்கும் ! நேரடிப் பேச்சுகளின் வழி பெரிய “கேக்” துண்டு சாப்பிடலாம்.