சிரம்பானில், ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை மூடச் சொன்னதில் எந்தவொரு தீய எண்ணமும் இல்லையென, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் இன்று தெரிவித்தார்.
சமீபத்தில் லாடாங் ஷாங்காய் தமிழ்ப்பள்ளிக்கு முகமட்டின் வருகைக்கு முன், திருவள்ளுவர் சிலை மூடச்செய்ததற்கு, மந்திரி பெசாரின் அலுவலகம்தான் காரணம் எனக்கூறி, எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மையில், அப்பள்ளிக்கு நிலம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ள வந்த முகமட், அச்சிலையை மூடச் சொன்னது உண்மைதான் என்றார். மந்திரி பெசார் அலுவலகம் அச்சிலையை மூடச்சொன்னதற்கு காரணம், வள்ளுவர் மீதுள்ள மரியாதையினாலேயே தவிர, எதிர்க்கட்சியினர் கூறுவது போல் அதனை அவமதிப்பதற்காக அல்ல என்று அவர் விளக்கப்படுத்தினார்.
“திருவள்ளுவர் சிலைக்கு முன்னதாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் நின்று பேசினால், வள்ளுவருக்குப் பின்புறத்தைக் காட்டி, அவரை அவமதிப்பதாக இருக்கும். எனவேதான், சிலையை மூடச் சொன்னோம். இதனைக் காரணமே இல்லாமல் ஒருசிலர் அரசியலாக்கிவிட்டனர்,” என அவர் மேலும் கூறினார்.
லாடாங் ஷாங்காய் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலமும், அப்பள்ளியின் நுழைவாயிலில் கோயில் கட்டுவதற்காக 17,000 அடி நிலத்தை மாநில அரசு வழங்கவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே அவர் அங்கு வந்ததாக கூறினார்.
மாநில அரசு வழங்கிய அந்நிலத்தில், பள்ளிக்கு 3 மாடியில் புதியக் கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் 4.9 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நெகிரி மாநில மக்களுக்குத் தெரியும், நான் அவர்களுக்காக நிறைய செய்துள்ளேன். சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு அனுமதி பெற்று தந்துள்ளேன். 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிலம் வழங்கியுள்ளேன்,” என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.
அண்மையில், மலேசியா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலக் கொடிகளால் மூடப்பட்ட திருவள்ளுவர் சிலையும், அதனை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையும் புலனக் குழுக்களில் அதிகம் பகிரப்பட்டு, பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கு ஆளாகி வந்தது.
மந்திரி பெசாரின் வருகைக்கும் சிலை மூடப்பட்டதற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே, சிலையை மூடச் சொல்லி யாரும் பணிக்கவில்லை என்றும், புதிதாக வண்ணம் பூசப்பட்டதால்தான் அதனை மூடி வைத்ததாகவும், நேற்று பள்ளியின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக எஃப்.எம்.தி. இணையப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
“திருவள்ளுவர் சிலைக்கு முன்னதாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் நின்று பேசினால், வள்ளுவருக்குப் பின்புறத்தைக் காட்டி, அவரை அவமதிப்பதாக இருக்கும். எனவேதான், சிலையை மூடச் சொன்னோம். இதனைக் காரணமே இல்லாமல் ஒருசிலர் அரசியலாக்கிவிட்டனர்”
அப்படின்னா பத்துமலைக்குப் போயிட்டு வரும் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் தங்கள் பிட்டத்தை காட்டும் வகையில் தான் திரும்புகிறார்கள். ஆனால் அது முருகனை அவமதிப்பதாக நாங்களும் கருதவில்லை; சிலாங்கூர் மந்திரி புசாரும் அந்த முருகன் சிலையை மூடச் சொல்லவில்லையே. ஒருவேளை சிலாங்கூர் மந்திரி புசாராக நீங்கள் இருந்தால் முருகன் சிலையை மூடச்சொல்வீரா?
(முட்டாள்) தமிழர்களை குப்புறத் தள்ளிவிட்டது உண்மைதான் ஆனால் அது அவர்களின் மீசையில் (மீசை உள்ளவர்களுக்கு) மண் ஒட்டுவதற்காக இல்லை, அப்படித்தானே மாண்புமிகு அவர்களே…?
வள்ளுவர் சிலை மூடப்பட்டதற்கு இந்த விஷயத்தில் இதுநாள் வரை முன்னுக்குப்பின் முரணான சால்ஜாப்புகளை சொல்லிவந்த மானங்கெட்டவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டதே, இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?.
2007-இல் கிள்ளான் பாடாங் ஜாவா அம்மன் சிலை + மந்திரி புசார் = 2008- பொதுத் தேர்தல் சிலாங்கூர் முடிவுகள் . இப்போது சரியாகப் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2017-இல் வள்ளுவர் சிலை + மந்திரி புசார் = 2018-பொதுத் தேர்தல் (மக்களின் முடிவுகள் இப்போதே வள்ளுவர் கையில் ஓலைச் சுவடி வடிவில்) …!
அப்பப்பா எப்படி எல்லாம் புனைவு காரணத்தைச் சொல்ல முடிகின்றது பாருங்கள்.
ஓர் அறையில் நமது மாமன்னர் படம் மாட்டப் பட்டிருந்திருந்து அதற்கு முன்னால் நின்று பேசுவது அப்படத்தை அவமதிப்பதாகுமா?
எப்படியெல்லாம் ‘ரூம்’ போட்டு சிந்திக்கின்றார் பாருங்கள்!
டேய் திருட்டு நாய்களா, சாண்டா குடிக்கிகளா ஏண்டா திருப்பி-திருப்பி பேசுறீங்க, ஆளுக்கு ஒரு காரணம் சொல்லுறீங்க, ம.இ.காரன் அது மூடுவே இல்லை , சொல்லவே இல்லை, முட்டவே இல்லைனு சாதிக்கிறான். இன்னும் எத்தனை காலம் இப்படி திருப்புவீங்க. கம்ணாட்டிகளா! திருவள்ளவர் மீது அக்கறை இருந்தால் , பந்தலை திருவள்ளுவர் சிலையை உள்ளிட்டு அல்லவா அமைத்திருக்க வேண்டும், சிலையை மூடி மரியாதை செலுத்தினோம் என்று முட்டாள் தமிழனிடன் சொல்லுடா கூமுட்டை. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு உன் கூட்டத்தை நீ தொடங்கி இருந்தால் , அதன் பின் எவன் சிலையை அவமதிப்பதுப்போல் செய்வான். உங்க கூட்டத்திலே, நீங்கள் இறை வணக்கம் செலுத்துகிறீர்கள், ஏன் எங்கள் மக்களுடன் நீயும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினால் தேய்ந்தா போய்விடுவீர்கள்
இதிலிருந்து நமக்கு தெரிய வேண்டும் -இப்போதுள்ள தலைகளுக்கு திமிர் அதிகம்– இந்த மட கம்மனாட்டிக்கு திருக்குறளை பற்றியோ திருவள்ளுவர் பற்றியோ என்ன தெரியும்? அதிலும் இது தமிழ் பள்ளி -மலாய் பள்ளி இல்லை. இந்த நாதாரிக்கு என்ன அகங்காரம்? இவனுக்கு நம்மை மதிக்க தெரியாவிட்டால் நாம் ஏன் மதிக்க வேண்டும்? அது இவன் அப்பன் பணம் அல்ல -மக்களின் பணம். இவன் அங்கு போய்தான் அது நடக்க வேண்டும் என்று இல்லை. அலுவலகத்திலேயே இருந்து அதை நடத்தி இருக்கலாம்.
சிலாங்கூரில் அம்மன் சிலை வைத்தது தே. மு. – க்கு ஆப்பு. நெ. செம்பிலானில் திருவள்ளுவர் சிலை வைக்கப் போகுது ஆப்பு.
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் 892)
பத்திகை செய்தி ! தலைமை ஆசிரியரின் வாக்குமூலம் ! துப்புரவு வேலைகள் நடைபெறும் போது, தூசு படிந்துவிடாமல் இருக்க சிலையை மூடினோம் ! யாரும் ( MB ) மூட சொல்லவில்லை என்ற செய்தி பொய்தானே ? கூட்டு களவாணிங்களா , உங்களுக்கு இருக்குடா ஆப்பு !
திருவள்ளுவர் சிலையை மறைத்து வைக்க சொன்னது நீங்கள்தான். அதற்கு தாளம் போட்ட்து பன்னாடை அரசியல் வாதிகள்.சுப்ரமணியம் அதை கைதட்டி மகிழ்ச்சி அடைகிறது. அடுத்த தேர்தலில் உங்களுக்கெல்லாம் பதில் கிடைக்கும். மக்கள் பொறுமையை காத்து உங்கள் அடாவடித்தனத்தை கண் காணித்து வருகின்றனர். பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.
நாம் இந்நாட்டின் குடிமகன் , நாம் தமிழர் , நாம் இந்நாட்டின் மூவினந்தின் ஓரினம் என்பது அசையாத உண்மை . நமது மொழி , கலாச்சாரம் , வழிபாடு அனைத்தும் நமக்கு உரியது . திருவள்ளுவர் அவரின் குறள் உலகம் போற்றும் வரப்பிரசமாகும் , நம் பள்ளியில் அவரின் சிலையினை வைத்து போற்றுவது நமது கடமைகளில் ஒன்றாகும் . இதற்கு ஏன் கல்வி அமைச்சிடம் அனுமதி பெறவேண்டும் , கல்வி இலக்காவிடம் அனுமதி பெறவேண்டும் , மாநில துறைகளில் அனுமதி பெறவேண்டும் என்பது என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை ? மற்ற இனத்திற்கு திருவள்ளுவரை பற்றி தெரியாமல் இருந்தால் , அதனை அவர்களுக்கு நன்கு விளக்கி கூறலாமே ! தலைமையாசியார் மற்ற இனம் ஆசியர்களுக்கு , மற்ற இனம் அதிகாரிகளுக்கு விளக்கி கூறிருக்கலாமே , ஒரு வேளை அவர்கள் விளங்கிக்கொள்ளாமல் முரண்டு பிடித்திருந்தால் மேல்நிலைக்கு எடுத்து சென்றிக்கலாமே ! அதனைவிடுத்து தலையாசியார் , ஆசிரியர் பொய்கூறி சமாளிக்கலாமா ? யார் அவர்களை பொய் கூறி சமாளிக்க சொன்னது ? அல்லது தலைமையாசியாருக்கு , ஆசியருக்கு உண்மையிலயே திருவள்ளுவர் யார் ? அவரின் குறள் மற்றும் அதன் அர்த்தம் தெரியாதோ ? மாணவருக்கு உண்மையினை போதிக்கவேண்டிய இவர்கள் பொய் கூறலாமா ? மாதா , பிதா , குரு , தெய்வம் என மூன்றம் இடத்தில் வைத்துள்ள இவர்களை பற்றி தவறாக கூறிட நல்ல வார்த்தைகள் இல்லை நம் தமிழ் மொழியில் . வினை விதைத்தவன் வினை அறுப்பான் பின் நாளில் , இதற்கு ஊன்றுகோலாக இருந்தவர்களும் வினை அறுப்பது உறுதி. நாம் ஒன்றிணைவோம் தமிழ் நேசிப்போம் , தமிழை வளர்ப்போம் .
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்பதற்கு உதாரண புருஷனாகி விட்டார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான்.