இலங்கையில் கஞ்சாப் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் வரையான இலங்கையா்கள் கஞ்சா பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அபாயகர ஔடதங்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் பத்ரானி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்குறித்த தகவல்களை வௌியிட்டிருந்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், இலங்கையில் கஞ்சா பாவனையாளர்கள் அதிகளவில் மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றனர்.
அதற்கடுத்ததாக மத்திய மாகாணம் மற்றும் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களும் கஞ்சாப் பாவனைக்கு பெருமளவில் அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர் என்றும் பத்ரானி சேனநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com

























