நாடறிந்த சமூகச் சேவையாளர், ‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் சற்றுமுன், நோயின் காரணமாகக் காலமானார். அன்னாருக்கு வயது 68.
நுரையீரலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த சில நாட்களாக, கே.பி.ஜே. டாமான்சரா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையத்தில் (ஐ.சி.யு.) அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல், இரவு 10 மணியளவில், அவர் உயிர் பிரிந்தது.
நாளை காலை, தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TTDI) மசூதியில் பிரார்த்தனையைத் தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு, புக்கிட் கியாரா முஸ்லீம் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2008 -ஆம் ஆண்டு, ஹஜ் யாத்திரி சென்றபோது, தற்செயலாக “ஆபத்தான இரசாயனம்” ஒன்றை சுவாசித்ததினால், அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக, அனாஸ் அலாம் ஃபைஸ்லி எனும் முகநூல் செயற்பாட்டாளர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரின் இறப்பு செய்தி வெளியான சில மணி நேரத்தில், நூற்றுக்கணக்கான இரங்கல் செய்திகள் சமூக ஊடகங்களை நிரப்பி வருகின்றன.
ஆழ்ந்த அனுதாபங்கள். இந்திய சமுதாயமே தன் தலைமகனை இழந்தது போன்ற ஒரு வேதனையை எங்களுக்கு அளித்துவிட்டு எங்கு சென்றீரோ!
ஒரு சிறந்த மனிதர், பல வழிகளில் தமிழ் சமூகத்துடன் ஒன்றி வாழ்ந்து போராடியவர். ஆத்ம சாந்தியடைய பிராத்திப்போம்
நல்ல மனிதர். நம் நாட்டில் ‘தமிழ்’ உயிர் பெற்றிருக்க பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவர். அன்னாரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்…
தமிழுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ்ப்பள்ளிகளுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல். என்றென்றும் தமிழர் உள்ளங்களில் வாழ்பவர். எங்களது அனுதாபங்கள்.
இறைவன் இவருக்கு நித்திய வாழ்வை அளிக்கவேண்டும். அவரால் துயருறும் அனைவருக்கும் அதனை தாங்கிக்கொள்ள சக்தியும் அளிப்பாயாக.