20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை – முதலமைச்சர்

cv viknesசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வடக்கு மாகாண முதலமைச்சரிடம் நேற்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “அரசியலமைப்பு திருத்த வரைவின் மூலம், மாகாணசபைகளின் அதிகாரங்களை பறித்து நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

எனவே மக்களுடனும், மாகாணசபை உறுப்பினர்களுடனும், முதலில் கலந்துரையாட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்து, முடிவெடுப்பதற்காக, மாகாணசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் வரும் செப்ரெம்பர் 4ஆம் நாள் நடத்தப்படும் என்று வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: