முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் இடம்பெற முன்னர், ஆனந்தபுரம் சமர் நடந்துகொண்டு இருந்தவேளை. அங்கிருந்து ஒரு பஜீரோ வாகனத்தில் தலைவரின் மனைவி மதிவதனி அக்கா, மற்றும் துவாரகாவை ஏற்றிக்கொண்டு முள்ளிவாய்க்கால் பக்கமாக சென்றவர் தான் “நிலவன் தம்பி”. இவரை பலருக்கு தெரிந்திருக்காது. “நிலவன் தம்பியே” மதிவதனி அக்கா மற்றும் மகள் துவாரகாவின் பாதுகாப்பை நெறிப்படுத்தும் தளபதியாக இருந்தவர். ஆனந்த புரத்தில் கடும் சண்டை மூண்டவேளை 3 காயப்பட்ட போராளிகள் சகிதம் இவர், மதிவதனி அக்கா மற்றும் துவாரகா ஆகியோரோடு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவரை முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் பார்த்ததே இல்லை என்று அப்போது தொடர்பில் இருந்த குட்டி என்னும் மூத்த உறுப்பினர் எனக்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை தலைவரின் பாதுகாப்பின் ஒரு பிரிவை கவனித்து வந்த ரட்ணம் மாஸ்டர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், அவ்விடத்தில் முழு பொறுப்பில் “பகலவன்” இருந்து வந்தார். முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் முன்னர் பகலவனிடம் 3 சயனைட் குப்பிகளை தருமாறு தலைவர் கோரி இருந்தார். அவை சாதாரண சயனைட் குப்பிகள் அல்ல. 3 முறை வடி கட்டிய சயனைட் குப்பிகள். சாதாரண சயனைட் குப்பி ஒன்றை கடித்தாலே உடனே உயிர் போய்விடும். 3 முறை வடிகட்டியது என்றால் அது எவ்வளவு கடுமையான சயனைட் குப்பியாக இருக்கும் என்பதனை நாம் நினைத்துக் கூட பார்க முடியாது. தலைவரின் பாதுகாப்பை கவனித்த அதே பகலவன் தான், பாலச்சந்திரன் பாதுகாப்பையும் உறுதிசெய்து வந்துள்ளார்.
இன் நிலையில் தான் லண்டனில் இருக்கும் தன்னுடைய நண்பி ஒருவரோடு சாட்டலைட் டெலிபோன் மூலம் தொடர்புகொண்டு குகா அக்கா(கேணல் ஷங்கர் அண்ணாவின் மனைவி) நாம் திடமாக உள்ளோம் என்று கூறியதோடு மேற்கண்ட சயனைட் விடையத்தையும் கூறியுள்ளார். முடிந்தால் உடைத்துக்கொண்டு செல்வோம். இல்லையென்றால் அனைவரும் மாண்டு போவோம். எந்த ஒரு கால கட்டத்திலும் சரணடைவு என்பதற்கு இடமே இல்லை என திட்டவட்டமாக தலைவர் அறிவித்துவிட்டார். புலிகளின் அரசியல் துறையினர், மற்றும் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளிகள் மட்டும் சரணடைய விரும்பினால் சரணடையலாம் என்பது தலைவரது கருத்தாக இருக்கிறது. எந்த ஒரு மன சஞ்சலமோ, கலக்கமோ இல்லை. அவர் தெளிவாக தெரிவித்த வார்தைகள் இவை என கண்ணிர் மல்க அவர் தெரிவித்துள்ளார். அன்று அவர் மதிவதனி அக்கா பற்றி பேசவில்லை.
30,000 ஆயிரம் ராணுவம் சூழ்ந்திருக்க, ரஷ்ய விமானங்கள் குண்டு போட உதவிசெய்ய , 30க்கும் மேற்பட்ட இந்திய கடல்படை கப்பல்கள் சூழ நிற்க்க, அதுபோக ஹிந்தி ராணுவம் களத்தில் நின்று திட்டங்கள் வகுத்து கொடுக்க… உலகமே ஒன்றினைந்து புலிகளை அழிக்க களத்தில் நின்றாலும், வீரத் தழிழனாய், மறவர் குலத்தவனாக மார் தட்டி நின்றவர் தலைவர் பிரபாகரன். இதனை கோட்டபாய அல்ல எவராலும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது ! மாவீரனுக்கு ஏதுடா சாவு !
ஆனால் பாலச்சந்திரன் பாதுகாப்பை இறுதியகா கையில் எடுத்த பகலவன் எங்கே ? அவர் இறக்கவில்லை என்றும் காணமல் போயுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில் பல சந்தேகங்கள் உள்ளது. பகலவனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் பல கேள்விகளுக்கு விடை உடனே கிடைத்துவிடும்…. அங்கே என்ன துரோகங்கள் நடந்தது ? தேடல்கள் தொடரும் இறுதிவிடை காணும் வரை ..
அதிர்வுக்காக
கண்ணன்
-athirvu.com