இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை

sambanthanதமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் அதிகாரி ப்ரயன் புரக் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை, காணி விடுவிப்பு மற்றும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற தாமதமாகின்றமை என்பன தொடர்பிலும் எதிர்க் கட்சித் தலைவர் அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிக்கு விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.

-tamilwin.com

TAGS: