தமிழர்களை மஹிந்தவே காப்பாற்றுவார்! சம்பந்தன் நம்பிக்கை

sambbanthanதமிழர்களுக்கு தேவையான அரசியல் தீர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினாலேயே வழங்க முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியமையினால் இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வர முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என சம்பந்தன் மஹிந்தவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தங்களினாலேயே தீர்வு ஒன்று வழங்க முடியும் என சம்பந்தன் தெரிவிதள்ளார்.

இதனால் புதிய அரசியலமைப்பில் தலையிட்டு உதவுமாறு தான் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

-tamilwin.com

TAGS: