சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா. தான் போர் நடைபெற்றவேளையில் வன்னி கூட்டுபடைத் தளத்தில் இருந்ததாகவும். தான் முள்ளிவாய்க்காலில் இருக்கவில்லை என்றும் நேரடியாக TV ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விடையம் யாவரும் அறிந்ததே. ஆனால் அதிர்வு இணையத்தால் பெறப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பாருங்கள். இதில் முல்லைத்தீவு தற்காலிக முகாம் ஒன்றில் ஜெயசூரியா இருந்து திட்டங்களை தீட்டிவிட்டு. பின்னர் நேரடியாக களம் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.
அத்தோடு தேசிய தலைவரது மகன் சாள்ஸ் அன்ரனி, ஒரு படைப் பிரிவை தலைமை தாங்கிச் சென்று. பெரும் உடைப்பு ஒன்றுக்கு திட்டம் தீட்டினார். அதனூடாக அவர்கள் வெளியேற முற்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் வரும் திசையை முன்னரே அறிந்த ராணுவத்தினர் அவர்களுக்கு பெரும் பொறி ஒன்றை வைத்து அனைவரையும் சிக்கவைத்தார்கள். குற்றுயிரும் குலையுமாக இருந்த அனைவரையும் அருகில் சென்று சுட்டுக் கொன்றார்கள். இந்த வீடியோ சாள்ஸ் அன்ரனி இறந்து, சில பொழுதில் எடுக்கப்பட்ட வீடி ஆகும். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்… இந்த வீடியோவில் , சிவில் உடையில் 2 பேர் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இறுதிப் போரில் எவ்வாறு புலிகள் பக்கமாக இருந்தார்கள் ? இவர்கள் செய்த அதிர்சிகரமான செயல்கள், அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது. இவர்கள் புலிகள் இயக்க தலைவர்களை எவ்வாறு வேவுபார்த்தார்கள். என்ன செய்தார்கள்,
என்பது போன்ற திடுக்கிடும் விபரங்களை நாம் , சில தினங்களில் வெளியிட உள்ளோம். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
-athirvu.com
https://youtu.be/uQeZyAXm3FY