நாடுதழுவிய அளவில் அனைத்து மாணவர்கள் தங்கிப்படிக்கும் சமயப் பள்ளிகள் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.
இன்று, கோலாலம்பூர், டத்தோ கெராமாட்டிலுள்ள தாபிஸ் டாருல் கொரான் இட்டிஃபாஹ்யாவுக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸாகிட் இவ்வாறு கூறினார்.
இப்பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீயில் 23 பேர் மாண்டதாக கூறப்படுகிறது.
கட்டடங்களின் பாதுகாப்புக்கான விதிகள் ஊராட்சிமன்றங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகாவால் வரையப்பட்டவை என்றும் அவை மிகத் தெளிவானவை என்றும் அவர் கூறினார்.
“2011 ஆம் ஆண்டிலிருந்து, இது போன்ற 31 சம்பவங்கள் நடந்துள்ளன. தாபிஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்காக அனைத்து தரப்பினரும் பாதுகாப்பு தரங்களைப் பின்பற்றியாக வேண்டும்.
“மாநில அரசுகளின் விவகாரங்களில் பெடரல் அரசாங்கம் தலையிட விரும்பவில்லை…பாதுகாப்பு தர விதிகள் பின்பற்றப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்”, என்று ஸாகிட் இன்று கூறினார்.
டேய் வெங்காயம்– ஏதாவது விபரீதம் நடந்தால் தான் உன்னை போன்ற ஈனங்களுக்கு புத்தி வரும்– உன் மதத்தினர் எது வேண்டுமானாலும் செய்யலாம் கேட்க நாதி இல்லை – இப்படி ஏதாவது நடந்தால் தான் கண்கள் திறக்கும். அந்த பள்ளிக்கு அனுமதி இல்லாமலா இவ்வளவு காலம் நடப்பில் இருந்தது? எவன் ஒழுங்காக வேலை செய்கிறான்?
மனம் வருந்தம் தரக்கூடிய செய்தி இது. எந்த பள்ளியாக இருந்தாலும் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அதுவும் கல்வி இலாகா அதிகரிகளும் கவனித்து இருக்க வேண்டும்…
…உன் தாயின் உயிர் இப்பிடி போனா எப்படி இறுக்கு என் தாய் தமிழ்??? ….. இப்பிடி நினைப்பதால் தான் இலங்கையில் உன் மதத்தினர் கொள்ளப்பட்டதுக்கு நீதி கிடைக்கவில்லை!!!
மதத்தை மதமாக மதிக்காமல் “மதம்” பிடித்து அலைந்ததின் விளைவு என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்!!!
imran நான் என்ன சொல்லி இருக்கேன் என புரிகிறதா? ….படித்து பார். அப்படியும் புரியவில்லையானால் சொல் -நான் விளக்குகிறேன்.
இம்ரான், இஸ்லாம் என்றாலே உங்கள் வன்முறையைக் காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. இஸ்லாமியர் என்றால் எப்படி வேண்டுமானாலும் சமயப்பள்ளிகள் கட்டலாம் என்பதே தவறு என்று சாஹிட் கூறுகிறார். இப்போது பிள்ளைகள் இறந்ததற்கு யார் காரணம் என்கிறீர்கள்? கடவுள் மேல் பழியைப் போடுகிறீர்களா?
திரு இம்ரான் அவர்கள் , ஓர் இனம் இலஞ்சம் இல்லாமல் வாழ முடியாது , சோம்பேறி , மதத்தை தவறாக பயன்படுத்தலாம் என்பதை எல்லாம் ஆதரிக்கறார் என்பது அவரின் கருத்து கணைகளில் இருந்து புரிகிறது .
இலஞ்சம் , சோம்பேறி , மதத்தை பற்றி நன்கு உணராமல் அதனை தவறாக பயன்படுத்துவது, கடமையுணர்வு இல்லாதது என்ற போர்வையில் வழிகளை பயன்படுத்துவதால் நாடு பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்பதனை பலரும் அறிவர் , இதனை சரி செய்து நாட்டை கட்டி காட்டிடவேண்டும் , இல்லையேல் தற்போது நடந்திட்டிட , நடந்துக்கொண்டிருக்கும் சம்பவங்கள் தொடரும் , நாம் கண்ணீர் விடும் அவலம் மேலும் தொடர்ந்திடும் .
சமய பள்ளியின் மீது பழி சுமத்துவதைவிட,
அனுமதி கிடைக்காமல் சமய பள்ளி செயல்படுவதை கண்டும் காணாததுபோல் செயல்பட்டிருக்கும் அனைத்து அரசாங்கதுறைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூற தயங்கும் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி முதலில் இந்த தீ விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
ஜப்பான், கொரியா நாடுகளாய் இருந்திருந்தால் இந்நேரம் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருப்பார்கள்.
என்ன செயவது THIRD WORLD COUNTRY எருமைகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா ?
ஐயா RAHIM A S S அவர்களே- அதிகாரத்தில் இருந்து கொண்டு பொறுப்பேற்காமல் இருப்பதே மூன்றாம் உலக தத்துவம். இதற்க்கு மேல் வேறு என்ன சொல்ல?