எரிபொருள் விலை கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாகக் குறைகிறது

 

Petrolpricesdownகடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட எரிபொருள்கள், முதல் முறையாக இன்று நள்ளிரவிலிருந்து குறைந்த விலையில் விற்கப்படும்.

ரோன்95 மற்றும் ரோன்97 ஒரு லீட்டருக்கு முறையே இரண்டு மற்றும் மூன்று சென் விலை குறைந்து ரிம2.19 க்கும் ரிம2.49 க்கும் விற்கப்படும்.

டீசல் விலை நான்கு சென் குறைந்து ஒரு லீட்டர் ரிம2.10 க்கு விற்கப்படும்.