பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வரிகட்டுவது மலேசியர்களுக்குப் பிடிக்காத விசயம் என்பது அரசாங்கத்துக்கு நல்லாவே தெரியும் என்றார்.
இன்று மஇகா தேசியப் பேராளர் கூட்டத்தில் உரை நிகழ்த்திய நஜிப், மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவரது உரையில் இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும் தேசிய உயர்க்கல்விக் கடன் (பிடிபிடிஎன்) போதுமானதாக இருப்பதில்லை என்று குறிப்பிட்டதைத் தொட்டு பேசினார்.
“பிடிபிடிஎன் குறித்துக் கூறப்பட்டதை நான் ஏற்கிறேன். அது இந்தியர் பிரச்னை மட்டுமல்ல, எல்லாச் சமூகங்களையும் பாதிக்கும் ஒரு பிரச்னை. அதைக் கவனமாக ஆராய்வோம்.
“ஆனால், அதற்காக வரிகளை உயர்த்த முடியாது. ஏனென்றால் வரி செலுத்துவது மலேசியர்களுக்குப் பிடிக்காது. அவர்களுக்குப் பிடித்தது பொது விடுமுறை, உணவு” என்றார்.
இந்தியாவில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) 28விழுக்காடு என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
“இங்கு 6விழுக்காடுதான். அதற்கே மக்கள் குய்யோ முறையோ என்று கூச்சல் போடுகிறார்கள். அரசாங்கத்தின்மீது ஆத்திரப்படுகிறார்கள்.
“ஆனால், உண்மையில் விலையை உயர்த்துவது வர்த்தகர்கள்தான் அரசாங்கம் அல்ல. ஆனால், பழி அரசாங்கத்தின்மீது.
“உலகில் 165 நாடுகளில் ஜிஎஸ்டி உண்டு. இந்தியாவில் அது 28 விழுக்காடு. அதனால் இந்திய மலேசியர்கள் அது குறித்து குறை சொல்லக்கூடாது”, என்று நஜிப் கூறினார்.
உலக நாடுகளில் வெறும் ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப் படுகிறது. ஆனால் நம் நாட்டிலோ, ஜி.எஸ்.டி. க்கு முன்பு அரசாங்க வரி என்று ஒன்று இருந்தது. தற்போது அந்த அரசாங்க வெறியுடன், ஜி.எஸ்.டி. யம் சேர்ந்து இரு வித வரிகள், மக்கள் கழுத்தை நெரிக்கிறது. இந்தியாவில் ஒரு சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28% ஜி.எஸ்.டி. மற்ற பொருட்களுக்கு 2% முதல் ஜி.எஸ்.டி. பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு வரி இல்லை. ஐயா அல்தான்துயா நஜிப், உமது ஏமாற்றுத்தனத்தை ம.இ.கா. காரர்களிடம் மட்டுமே செல்லுபடியாகும்.
திரு சிங்கம்ஆரம்ப கர்ஜனை அருமை
இடையில் கரஜித்து சொதப்பிட்டிங்க,
பரதமாதா ஜே பெண்களுக்கான நப்பிகினு
க்கு 12% வரி!
எரிபொருள் , ரப்பர் , செம்பனை,ஈயம் மற்றும் அணைத்து வளங்களும் உள்ள நாடு இது. ஜி எஸ் டி வசூல் எதற்கு ?
வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா. நாம் அந்த படியலில் நாம் நெருங்கி விட்டோமா என்ற கேள்வியும் உண்டு. அது வெறும் கேள்வி குறியே….நாம் வெளி நாட்டு சுற்று பயணிகளை அதிகம் எதிர்பார்கிறோம். இந்திய அப்படி எதிர்பார்க்கவில்லை என்று என்னுகிறேன். இங்கு நமது நாட்டில் விலை வாசிகள் நாள் தோறும் ஏறிக்கொண்டே போகின்றன. மீன்களின் விலைகள் கிடுகிடு என ஏறி கொண்டே போகின்றன. ஒரு சராசரி தொழிலாளி பெரும் மாத வருமானம்….. குறைந்த வருமானம் ரிங்கிட் மலேசியா 1200.00 என நிர்ணிக்க பட்டு உள்ளன. மக்கள் குய்யோ முறையோ குச்சல் போடும் காரணம் பண கஷ்டம்தான். அந்த இந்தியா நாட்டில் பிச்சை எடுக்கும் தொழில் ஒரு தொழிலாக பார்க்க படுகிறது. அந்த நாட்டின் பிரதமர் அதை பற்றி கவலை படுகிறமாதிரி தெரியவில்லை. அனால் நம் நாட்டில் அந்த தொழில்கள் கிடையாது. எல்லோரும் உழைத்து சாப்பிடும் நிலையில் உள்ளோம். மக்கள் உங்களை பிரதமாராக தேர்ந்து எடுத்தது அந்த நாட்டின் பெருமைகளை பேசுவதற்கு அல்ல. எங்கள் பிரதமர் எங்களுக்கு என்ன நன்மைகள் செய்கிறார் என்றுதான் பார்க்கிறோம் தவிர அந்த நாட்டின் இந்தியா ஜிஎஸ்டி 28 விழுக்காடு பற்றி அல்ல. எங்களுக்கு 6 விழுக்காடு பெரும் சுமையாகதான் உள்ளது. ஐந்து இளம் பிள்ளைகள் வைத்து வளர்ப்பவன் ஒரு டெக்சி தொழிலாளி….. நாள் ஒன்றுக்கு வேலை செய்யும் நேரம் 12.00 மணி நேரம். அப்படி அவன் செய்தல் தான் அன்றைய வருமானம் ரிங்கிட் மலேசியா 150.00. அதில் செலவுகள் ஜிஎஸ்டி உட்பட போக வீடிற்கு கொண்டு போகும் பணம் வெறும் 50.00. ரிங்கிட். போதுமா பிரதமர் அவர்களே. நீங்கள் நல்லவர்தான் இல்லை என்று சொல்லவில்லை எங்கள் இந்திய இனத்திற்கு அதிகம் கொடுத்த பிரதமரும் நீங்கள்தான். உங்கள் பேச்சுக்கு கை தட்டும் ஒரு கும்பலை மட்டும் பார்க்காதீர்கள். எங்களை போன்ற மக்கள் உங்களை நம்பும்படி உங்கள் பேச்சுக்கு கை தட்டு வாங்குவது உங்களுக்கும் எங்களுக்கும் பெருமைதானே. நன்றி
அட மண்டு, இந்தியகாரன் செவ்வாய் கிரகத்துக்கு போர ஆராய்ச்சிக்கு செலவிட 28% கேட்கிறான். இந்தியாக்காரன் சொர்க்கம் போகவே கொட்டிக கொடுப்பான், ஆனால் ,நீ அமேரிக்காகாரன் கேட்காமலேயே 15 பில்லியனை கொட்டி கொடுக்க வாய்பந்தல் போட்டுட்டு வாரயோ!
உன் திருட்டு தனத்துக்கு அமேரிக்காவில் 15 பில்லியன் முன் ஜாமின் எடுத்த மாதிரி இல்ல இருக்கு.!!!
திருட்டு, பொய் பித்தலாட்டம் போன்றவற்றின் நவீன தந்தை நஜிப் என்பதற்கு singam அவர்களுடைய கருத்துக்களே போதும்.
இந்தியாவில் GST 28% என்று அங்கலாய்க்கிற எருமை, அந்த நாட்டின் கார்களின் விலையை இந்நாட்டு கார்களின் விலைகளோடு ஒப்பிட்டு பேச முடியுமா ?
இதற்குதான் இவர்களை எருமைகளுக்கு ஒப்பிடுவது சாலச்சிறந்தது.