மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) , கம்போங் செராம்பாங் இண்டா அல்லது லாடாங் கட்கோ நில உரிமையாளர் மற்றும் விற்பனை விவகார வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய, லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்துள்ளது.
இன்று காலை சுமார் 11 மணியளவில், ரெனா.துரைசிங்கம் மற்றும் ரெனா.இராமலிங்கம் இருவரையும் எம்.ஏ.சி.சி. கைது செய்தது. புத்ரா ஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவ்விருவரும், பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதானதை உறுதிபடுத்திய எம்.ஏ.சி.சி.-யின் விசாரணை குழு இயக்குநர் சிமி அப்துல் கானி, அது குறித்து மேலும் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாளை, தடுப்புக் காவல் நீட்டிக்க, அவர்கள் இருவரும் புத்ரா ஜெயா உயர்நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 18-ல், கெட்கோ விவகாரத்தை நன்கு அறிந்தவர் என நம்பப்படும், 68 வயதான ஒருவரை எம்.ஏ.சி.சி. கைது செய்ததாக அதன் தலைமை ஆணையர் சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார். அவர் இந்த கெட்கோ நில விற்பனையில் இடைத் தரகராக இருந்தார் எனத் தெரிகிறது.
முன்னதாக, சூல்கிப்ளி அஹ்மாட்டின் தலைமையில், எம்.ஏ.சி.சி. குழு ஒன்று, பாதிக்கப்பட்ட கட்கோ குடியேறிகளை நேரில் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநில செயலகம், நெ.செம்பிலான் டெவலப்மென்ட் கோபரேஷன், ஜாலான் ஈப்போ – சிங்கம் & யோங் கணக்கியல் நிறுவனம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தாமரை ஹோல்டிங்ஸ் சென்.பெர். ஆகியவை எம்.ஏ.சி.சி.-யின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்விவகாரத்தில் எம்.ஏ.சி.சி. தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூடிய விரைவில் இன்னும் பலர் கைது செய்யப் படலாம் எனவும் சூல்கிப்ளி கூறினார்.
இதற்கென ஒரு சிறப்புப் பணிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கௌவும் மறுபடியும் தருமம் வெல்லும்.
கிரேட் கெட் கோ மக்கள்
காலங்காலமாக ம.இ .கா தலைவனுங்களின் வெற்றுவாக்குறுதிகளை கேட்டு கேட்டு புளித்து,வெறுத்து,சலித்து போன இந்த காதுகளுக்கு ஊழல் தடுப்பு அதிகாரிகளின் நடவடிக்கை நமது காதுகளுக்கு இதமாக இருக்கிறது.நண்பர்களே !அன்பர்களே!! நமது சமுதாயத்துக்கு ஆப்பு வைப்பது மலாய்காரனோ அல்லது சீனானோஅல்ல.நமது இனத்துக்கு எதிரி நாம்தான்.
கைது செய்தால் மட்டுமே நல்ல பெயர் கிடைத்து விடாது. அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தண்டனை பெற வேண்டும். காரணம் அவர்கள் பண முதலைகள். எதனையும் மீறும் சக்தி அவர்களிடம் உள்ளது!
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி/நிவாரணம். இவன்களுடைய நிறுவனங்களில் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது-ஆதரவும் தரக்கூடாது.
காட்டிலும் மேட்டிலும் ரத்தமும் வேர்வையும் சிந்தி விடியாத காலை பொழுதில் நெட்ரியில் விளக்கை கட்டி கொண்டு ரப்பர் மரம் சீவி உழைத்த தோட்ட தொழிலாளியின் ரத்தத்தில் உருவான தோட்ட மாளிகை !! PPN ஹாஸ்டல் !! மற்றும் ஒரு சில தோட்டங்கள் !! சில நிறுவனங்கள் எப்படி NUPW விடமிருந்து கைமாறியது என்பதையும் புலன் விசாரனை செய்தால் அரை வயிறு கஞ்சி குடித்து வாழ்வில் எந்த வித சுகத்தையும் வசதியையும் அனுபவிக்காமல் செத்த ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளிகளின் ஆத்ம இப்போதாவது இத்தகைய இந துரோகிகளின் நிலை கேட்டு சாந்தி அடையும் !!
இதுவெல்லாம் தேர்தல் நாடகமாப்பா, சரி வாங்கனவன ஏசிஏ பிடிச்சிகிடுச்சி, இடைத்தரகரை ஏசிஏ கொத்திடுச்சி, அது தோட்ட நிலம்,
அதனை கைமாற்ற அங்கீகரிச்ச மாநில எஸ்கோ எங்கசார்? அதுக்கு கையெழுத்து போட்ட மந்திரி புசார் எங்கே சார்.. புடி அவனுங்களையும், நீதி மன்றத்திலே ஏத்தி தண்டிக்கனும், ஏசிஏ வும் தேர்தல் சீன் காட்டக்கூடாது இல்ல
பொறுத்திருந்து பார்ப்போமே!நல்லதே நடக்கட்டும் !!