ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று(26) யாழ். நல்லூர் பின் வீதியிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனைப் போற்றிச் சிறுமியொருவர் கவிதை சொன்ன விதமும், அந்தக் கவிதையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களும் நிகழ்வில் கலந்து கொண்ட பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
குறித்த சிறுமி கவிதை சொல்ல ஆரம்பிக்கும் போது ‘எங்களுக்கு என்ன தெரியும்… நாம் இந்த உலகத்திற்கு வரவேயில்லை! ஆனாலும் உங்களைப் பற்றி அறிந்ததும் எவ்வளவு ஆச்சரியம்! என ஆரம்பிக்கிறார்.
எதிர்கால சின்னங்கள் நாம் எப்படியும் காண்போம் தமிழீழம்! விழுதாய் விழுந்து, விருட்சமாய் நிமிர்ந்து வீரத்தைப் பெற்றிடுவோம்… இது எங்கள் திலீபன் அண்ணாவே சத்தியம் எனத் தெரிவித்துத் தனது கவிதையை நிறைவு செய்தார்.
சிறிய வயதிலேயே தேசப்பற்று அதிகம் கொண்டுள்ள குறித்த சிறுமியைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
-puthinamnews.com