வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வௌியிட்டாலும் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறும் வகையில் செயற்பட முடியாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
பியகம பிரதேசத்தில் உள்ள வாய்க்கால் புனரமைப்பு செயற்றிட்டத்தை இன்று (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட ராஜாங்க அமைச்சர், வட மாகாண சபை முதலமைச்சர் பொறுப்பற்ற வகையில் கருத்து வௌியிட்டு வருவதாகவும், அவரின் சில கருத்துக்கள் அடிப்படைவாத முறையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வட பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக முதலமைச்சர் போலியான ஆவணங்களை தயாரித்து தொடர்ந்து மாற்று வௌியிட்டு வந்தாலும், கடந்த பல தசாப்தங்களாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு பிரிவின் ஊடாக பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், முதலமைச்சர் கோரும் வகையில் வடக்கில் பாதுகாப்பு படையினரையோ முகாம்களையோ அகற்ற முடியாது என தெரிவித்தார்.
-tamilcnn.lk