முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தயிப், தாம் அம்னோவில் மீண்டும் சேர முடிவு செய்தபோது கூடவே மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்மரையும் கூடவே அழைத்து வரத் திட்டமிடவில்லை என்று கூறினார்.
அப்படிப்பட்ட கதையைக் கட்டிவிட்டது யார் என்பது தமக்குத் தெரியாது என்றாரவர்.
“நான்தான் அம்னோவில் மீண்டும் சேர விரும்பினேன். கூடவே யாரையும் அழைத்து வரத் திட்டமிடவில்லை”, என இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் முகம்மட் கூறினார்.
கிழ ஓநாய் ஒன்று அரசியல் கூடாரம் ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து பார்த்தது ! எவ்விடத்திலும் எதுவும் கிடைப்பதற்கு வழியில்லை என்று தெரிந்ததும் தின்றுக் கொழுத்த பழைய இடத்திலேயே வந்து நுழைந்துகொண்டது.
இவன் பேசிய உண்மை— அம்னோ ஒரு தங்க முட்டை இடும் வாத்து. இவனின் வாயாலேயே வந்து விட்டது- இந்த உண்மை பெரும்பாலோர்க்கு எப்போதோ தெரியும்– இதனால் தான் இவ்வளவு அநியாயங்கள்.