தமிழ் மக்கள் ஆதரிக்காத எந்தத் தீர்வையும் த.தே.கூ ஏற்றுக்கொள்ளாது; மன்னார் ஆயரிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

‘தமிழ் மக்கள் ஆதரிக்காத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது.

தமிழ் மக்களின் எண்ணங்கயே நாம் பிரதிபலித்து வருகின்றோம்.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன், நேற்று சனிக்கிழமை மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையைச் சந்தித்துப் பேசினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘தற்போது இடைக்கால அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது, புதிய அரசியலமைப்புக்கான இறுதி அறிக்கை அல்ல. நாங்கள் தமிழ் மக்களின் எண்ணங்களையே பிரதிபலித்து வருகின்றோம். அதனையே, புதிய அரசியலமைப்புக்குள் உள்ளடக்கவும் முனைகின்றோம்.’ என்றும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு மன்னார் ஆயர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

-puthinamnews.com

TAGS: