நாட்டிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்கள், துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைகள் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “நீதியான தேர்தல் முறைமையை சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள். அரசாங்கம் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. தேசியம், நாடு, ஒருமைப்பாடு என்பனவற்றை பாதுகாக்க சிறுபான்மை மக்கள் அரப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.” என்றுள்ளார்.
-puthinamnews.com