அந்த “எச்” யார் என்று தமக்குத் தெரியும் என்கிறார் மகாதிர்

 

 

பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) இளைஞர் பிரிவின் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கு கட்சியை விட்டு வெளியேறுவதற்கு ரிம5 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படும் அந்த மர்ம மனிதர் யார் என்று தமக்குத் தெரியும் என்று மகாதிர் கூறினார்.

ஆனால், அந்த “எச்” (“H”)என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மனிதருடன் தமக்கு நெருக்கம் இல்லை என்று மகாதிர் மேலும் கூறினார்.

“ஆம். எனக்கு அவரைத் தெரியும். ஆனால் எனது காலத்தில் அம்மாதிரியானவர் அம்னோவில் இல்லை அல்லது எனது நிருவாகத்தில் எந்த இலாகாவிலும் இல்லை.

“இந்த மனிதர்கள் அவர்களின் எஜமானர்களுக்கு சேவை புரிய இருக்கிறார்கள்”, என்று மகாதிரை மேற்கோள் காட்டி சினார் ஓன்லைன் செய்தி கூறுகிறது.

“எச்” என்று மட்டுமே குறிப்பிடப்படும் பிரதமர் நஜிப்பின் உதவியாளர் தாம் கட்சியை விட்டு விலகி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதற்கு ரொக்கம் ரிம5 மில்லியன் கொடுக்க முன்வந்தார் என்று சைட் சாடிக் கூறியிருந்தார்.

ஆனால், “எச்’ என்ற அடையாளத்தைக் கொண்ட ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் வேலையில் இருந்ததில்லை என்று பிரதமர் நஜிப்பின் அரசியல் செயலாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அஹமட் கூறினார்.