பாஸ்-அம்னோ ஒத்துழைப்பு நடைமுறைப்படுத்தக் கூடியதாகிக் கொண்டிருக்கிறது என்பதோடு அது மலேசியாவுக்கு பயன்களை அளிக்கும் என்று பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷருடின் மாட் இசா கூறுகிறார்.
அம்னோவும் பாஸும் ஒன்றாக இணைய வேண்டியதில்லை. அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அரசியல் நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றாரவர்.
ஓர் அமைதியான நாட்டிற்கு இந்த ஒத்துழைப்பு மலாய்க்காரர்களையும் மலேசியர்களையும் ஒன்றுபடுத்த முடியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. இம்மாதிரியான ஒத்துழைப்பின் வழி அரசியல் எதிர்காலத்தை விவாதித்து திட்டமிடுவதோடு நாட்டின் நன்மைக்கானவற்றை நாம் காணமுடியும் என்பதில் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது அவர் மேலும் கூறினார்.