எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமர் ஆகும் சாத்தியம் பற்றி அம்னோ தலைவர்கள் விடாது கரைந்து கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்ட ஸைட் இப்ராகிம், இது ஒரு தவறான கருத்தாக இருக்க முடியாது என்றார்..
இதை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அம்னோ தலைவர்கள் இதை மிகக் கடுமையாக வலியுறுத்திக் கொண்டிருந்தால், இது ஒரு நல்ல கருத்துதான்
ஒரு கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரான ஸைட் இப்ராகிம், அம்னோவிலிருக்கும் எவரையும்விட லிம் கிட் சியாங் சிறந்த பிரதமராக இருப்பார் என்பதில் தமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.
முன்னதாக, மலேசியாகினியின் ஒரு கட்டுரையில், அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் லிம் பிரதமர் ஆவார் என்று இரு அம்னோ அமைச்சர்கள், சாலே சைட் கெருவாக் மற்றும் அப்துல் ரஹ்மான் டாலான், கூறியிருந்தது மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. அது குறித்து மேலும் விவரித்த ஸைட் இப்ராகிம், “முதன்மையான கருத்து. மக்கள் அவர்களிடம் ஒப்படைத்த முழுமனதான நம்பிகையைத் தவறாகப் பயன்படுத்தியவர்களைவிட கிட் சியாங் சிறந்தவராக இருப்பார் என்றார்.
மலாய்க்காரரை நம்பி இந்தியர் வாழலாம். ஆனால் சீனரை நம்பி இந்தியர் வாழ முடியுமா?
ஐயா ஜாஹிட் அவர்களே– தற்போதைய நிலையில் ஒரு குரங்கு மலாய்க்காரன் அடையாளத்தில் இருந்தால் அதைத்தான் பிரதமனாக்குவார்கள்- எவ்வளவு திறமை இருந்தாலும் லிம் கிட் சியாங் -கை பிரமன் ஆக்க மாட்டார்கள்– இதை எல்லாம் தீவிரமாக்கியவன் காக்கா.
இவ்வேளையில் சயிட் கூறியிருக்கும் இக்கருத்து, மலாய்க்காரர்களிடையே பக்காத்தான் மீது வெறுப்பை தூண்டுவதற்கு ஒப்பாகும். அறுபது ஆண்டுகளாக, மலாய்க்காரர்கள் மத்தியில் இனத்துவேசமான நச்சுத்தன்மையை வஞ்சகமில்லாமல் அம்னோவினால் கலக்கப்பட்டுள்ளது. Ketuanan melayu சிந்தனையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. பொதுத்தேர்தலை எதிர்நோக்கும் இவ்வேளையில் சயிட்டின் இக்கருத்து, பக்கத்தானுக்கு சாதகமாக அமையாது.
தேனீ ! en thaai thamiz !! இருவரின் கூற்றிலும் உண்மை ஒளிந்துகொண்டு இருக்கிறது !!!
ஒரு சீனர் இந்த நாடிற்கு பிரதமாராக வருவது வரவேற்கத்தக்கது. இன்று உலக நாடுகள் சீனா நம்பி இருக்கின்றன. நாம் அந்த நாட்டை பார்க்க வேண்டாம். நம் நாடு மலேசியா மலாய்க்காறர்கள் அடுத்து சீனர்களே அதிகமாக ஜன தொகையில் இருக்கிறாக்கள். சிங்கப்பூரில் அதிகமாக சீனர்கள் இருப்பினும் தமிழர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து இருகின்றனர். சீனர்கள் சுமார் 5 வருடம் பிரதமாராக இருகட்டுமே இதில் என்ன தவறு இருகிறது. அவர்கள் நம்மை விட சற்று திறமையானவர்கள் பொருளாதரத்தில் அடுத்ததாக அவர்களின் பங்கும் அதிகமா உள்ளது இந்த நாட்டில். 5 வருடம் அவர்களிடம் ஆட்சியை கொடுது பார்க்கலாமே. நம் நாட்டின் வலிமை தனத்தை.
திறமை உள்ள யாரும் பிரதமனாக வந்து நாட்டை வளப்படுத்தவேண்டும்– அனாவசிய இன துவேசம் பேசி குளிர் காய்வது நியாயமில்லை– இது எந்த நாட்டுக்கும் பொருந்தும். அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவனும் அந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் சேவகன். இதை நிலை நிறுத்தினால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. நடக்குமா?
ஜி.மோகன் சொல்வது நியாயம்தான் எனினும், மலேசியாவை பொறுத்தவரை, தேனீ யும் en thamizh thaai சொல்வதே சரி. மலேசிய சீனர்களை நம்புவது நல்ல பாம்பை எடுத்து பாக்கெட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கு சமம். உதாரணத்திற்கு, தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியை மனோகரன் என்பவரிடமிருந்து பிடுங்கி ஒரு சீக்காளி சீனருக்கு கொடுத்தது டி.ஏ.பி. கொஞ்ச நாளில் அந்த ‘போராட்ட வீரனும்’ மண்டையை போட்டான். சிரம்பான் நாடாளுமன்ற தொகுதியும் ஜான் பெர்னாண்டஸ் என்ற இந்தியரிடம் இருந்து எடுக்கப்பட்டு சீனருக்கு கொடுக்கப்பட்டது.புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற சீட்டும் பீட்டர் தாசனிடமிருந்து பிடுங்கப்பட்டது. கேமரன் மலையில் 1978ல் முதன் முதலில் டி.ஏ.பி.போட்டிட்டபோது டிபாசிட் இழந்தது. அன்று முதல் இன்று வரை அயராது உழைத்து வெற்றி விளிம்பிற்கு கொண்டு வந்தவர் சிம்மாதிரி என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் வெற்றி பெரும் தருவாயில் ஒரு சீனரை தூக்கிப் போட்டு ஜெயிக்க வைத்தது டி.ஏ.பி. இன்னும் எவ்வளவோ உள்ளது. அடுக்கினால் இங்கே இடம் போதாது. பெயருக்கு ஒரு ராமசாமியையும் குலசேகரனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு டிராமா காட்டுகிறது, டி.ஏ.பி. அவர்களும் சூழ்நிலையை நன்கு அறிவார்கள், இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை.