காலஞ்சென்ற பி. சுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ்ச்செல்வி தொடர்ந்துள்ள வழக்கில் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா ஆகிய இருவரும் அவர்களுடைய தற்காப்பு வாதத்தை 14 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் இதர பிரதிவாதிகளுக்கும் அதே உத்தரவை நீதிபதி ஹியு சியு கெங் பிறப்பித்தார். அவர்களில் நஜிப்பின் இரு உடன்பிறப்புகள், மூத்த வழக்குரைஞர் சிசில் ஆப்ரகாம், வணிகர் தீபக் ஜைகிஷன் ஆகியோரும் அடங்குவர்.
நஜிப்புக்கு எதிரான ஒரு வழக்கில் அவர் தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது இதுதான் முதல்தடவை
செந்தமிழ்ச்செல்வியின் வழக்கைத் தவிர்த்து, நஜிப்புக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றம் தடையை வழங்குவதற்கு பிரதிவாதிகள் இவ்வழக்கு சம்பந்தமான சிறப்பு சூழ்நிலைகளை முன்வைக்கவில்லை என்று நீதிபதி ஹியு கூறினார்.
மேலும், தடை வழங்குவது செந்தமிழ்ச்செல்வி மற்றும் அவரது குழந்தைகள் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு தடையாக இருக்கும் என்று நீதிபதி கூறினார்.
கோபால் ஶ்ரீராம், அமெரிக் சிங் சிது மற்றும் சைட் இஸ்கந்தர் சைட் ஜாபார் ஆகியோர் செந்தமிழ்ச்செல்வியையும் அவரது மூன்று குழந்தைகளையும் பிரதிநிதித்தனர்.
நீதிபதி ஹியூ சியூ கெங் வரும் காலம் பிரகாசமாக இராது. நம்பிக்கை நாயகன் அல்தான் தூயா அதிகாரம் வேலை செய்யும்.
கொலைக்காரர்களுக்கான அம்சங்கள் பொருந்திய முகங்கள் ஐயா !
கோபால் ஸ்ரீ ராம், அமெரிக் சிங் சிது மற்றும் சைட் இஸ்கந்தர் ஆகியோரை நினைத்தால், காலி டிராம் களும் சிமெண்ட் முட்டைகளும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
இது ஒப்புக்கு சப்பு கட்டுத்தல் என்பார்களே அதுபோலதான். சும்மா ஒரு நாடகம். இந்திராகாந்தி பிள்ளைகள் மதம்மாற்று விசியத்தில் நீதிதுறை செத்து போய்விட்டதே….
இதன் முடிவு என்ன எனபது தான் முக்கியம். ஏனெனில் நீதிபதி ஹியூ சியூ கெங் இந்த வழக்கை கேட்பார் என்பது நிச்சயமில்லை.
தீர்ப்பு எப்படிவரும் எழுதிய தீர்ப்பா எழுதாத
தீர்ப்பா?