இடைக்கால அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது – சிறிலங்கா அதிபரிடம் கோரிய வீரவன்ச

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன் போதே, இடைக்கால அறிக்கையை அமைச்சரவை அங்கீகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அதிபரிடம், விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

இடைக்கால அறிக்கை நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும்  இந்தச் சந்திப்பின் போது விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னதாக, அனைத்து அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் அவர் சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: