பிரபாகரனின் விடாப் பிடியே விடுதலைப் போராட்டத்தின் தோல்வி: இம்சை அரசன் இமானுவேல் !

இந்த இம்சை அரசன் 23ம் இமானு(வேல்) வடி(வேல்) ரவுசு தாங்க முடியவில்லை. பிரித்தானியாவில் இயங்கி வந்த பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) உடைத்து. தாம் உலகத் தமிழர் பேரவை என்று புறப்பட்ட நபர்கள் சிலர் உள்ளார்கள். இதில் சுரேன் சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரம்.. இவர் தற்போது எங்கே என்று தெரியாது. ஆனால் இவரால் அன் நாளில் இமானுவேல் அடிகளார், உலகத் தமிழர் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் சிங்கள தளபதி ஜெயசூரியாவை மிரட்டியது தொடக்கம். கண்களை கட்டி , தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் பல வீடியோக்களை வெளியிட்டவர்கள் நாங்கள் தான் என்று மார் தட்டிக் கொண்டவர்கள் இந்த GTF(உலகத் தமிழர் பேரவை). ஒட்டு மொத்தத்தில் சிங்கள அரசின், சிம்மசொப்பனம் தாங்கள் என்று ஜெமினி கலர் லேப் படம் காட்டி வந்தார்கள் இதுவரை காலமும்.  ஆனால் இன்று திடீரென எவருக்கும் தெரியாமல் இலங்கையில், நிற்க்கும் இமானுவேல் அடிகளார். சந்திரிக்கா,  வீட்டில் நைட்டியோடு நிற்க்க ,

அதற்கு பக்கத்தில் நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார். இது அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுபோக , மைத்திரி மற்றும் ரணிலை சந்தித்த இம்சை அரசன், தான் தான் உலகத் தமிழர்களின் தலைவன் என்பது போல பேசி. ஒரு தீர்வை எட்ட முயற்ச்சி செய்துள்ளார். அதுபோக வீரகேசரி பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அவர், தலைவர் பிரபாகரனுக்கு கடைசியாக புத்திமதி சொல்ல எவரும் இருக்கவில்லை என்றும். அவர் பிடிவாதமே அழிவுக்கு காரணம் என்று பொருள் படும் விதத்தில். உள் குத்தோடு கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டும் நிறுத்தவில்லை.

புலம்பெயர் மக்கள் ஒரு கனவில் வாழ்வதாகவும். தமிழ் ஈழம் வேண்டும் என்று அவர்கள் கேட்க்கிறார்கள். ஆனால் ஈழத்தில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் தேவை என்று கூறியுள்ளார். சில காலங்களுக்கு முன்னர், GTF லண்டனில் கூட்டங்களை நடத்தும். அதற்கு புலம்பொயர் தமிழர்கள் தேவை. பாராளுமன்றில் MPக்களை கூப்பிட்டு கூட்டம் போடுவார்கள். அதற்கும் புலம்பெயர் தமிழர்கள் தேவை. இதனை வைத்து அத்தனை MPக்களையும் கையில் போட்டு. உங்கள் ஏரியாவில் தமிழர்கள் உங்களுக்காக தேர்தல் நேரங்களில் வேலை செய்து தருவார்கள் என்று கூறி அவர்களை நண்பர்களாக்கி விடுவார்கள். இதனால் தமிழர்களுக்கு சப்போட் அதிகரித்துள்ளது என்று கூறி பீலா விடுவார்கள். ஆனால் உண்மையில் அந்த MPக்களோடு நின்று போட்டோ எடுத்து அதனை ஊடகங்களுக்கு செய்தியாக அனுப்பி, பெருமை பேசிக் கொள்வார்கள்.  அதற்க்கும் விசா இல்லாத , புலம் பெயர் தமிழர்கள் தேவை(MPக்கு உதவி செய்ய).

ஆனால் இலங்கையில் நிற்க்கும் போது. புலம்பெயர் தமிழர்களுக்கு விசர். அவர் முட்டாள்களென்று கூறி. ரணில்- மைத்திரி மட்டும் அல்ல , மகிந்த ராஜபக்ஷவின் உள்ளத்தையும் குளிரவைத்துள்ளார் இந்த இம்சை அரசன் ! இதெல்லாம் போகட்டும், விஜயின் சினிமா படம் போல இறுதியில் ஒரு “பஞ்ச்” டயலக் சொல்லியுள்ளார். அதனையும் நீங்கள் அறியவேண்டும். அது என்னவென்றால். பிரபாகரன் இறப்புக்கு பின்னர் எல்லாரும் வெளிநாட்டில் தங்களை தாங்களே தலைவர் என்று நினைத்து செயல்படுகினமாம். இம்சை அரசனின் , றியல் இம்சை தாங்க முடியலடா சாமி… என்ன செய்யலாம்? மக்களே உங்கள் கருத்தை சொல்லுங்கள்…

-athirvu.com

TAGS: