கனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!

கனடாவில் செயற்படும் தொழில் முகவர்களினால் புலம்பெயர் நாடுகளிலிருந்து செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான மோசடியில் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையை சேர்ந்த அமில பெரேரா என்பவரே கனேடிய தொழில் முகவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அமில பெரேரா டுபாயில் நல்ல தொழில் ஈடுபட்டிருந்தார். எனினும் கனடாவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்கு சென்றுள்ளார்.

கனடா செல்வதற்காக தனது வீடு மற்றும் நகைகளை விற்பனை செய்து அங்கு சென்றுள்ளார். எனினும் அவர் எதிர்பார்த்த எந்தவொரு வேலையையும் கனடாவில் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள காத்திருக்க வேண்டும் என தொழில் முகவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலுக்காக காத்திருத்திருந்து அமில பெரேரா வீடொன்றின் அடித்தள பகுதியில் தங்கிருந்தார். இவருடன் மேலும் மூன்று தொழிலாளர்கள் தங்கிருந்துள்ளனர்.

வெறும் வெளியான தரையில் தங்கியிருக்க வேண்டிய நிலை. தனியறை வசதிகள் கிடையாது. இதுவொரு மோசனமான அடித்தள பகுதியாக இருந்ததாக அமில பெரேரா தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களின் பின்னர் அமில பெரேரா, Kitimat பகுதியிலுள்ள கடையில் காசாளர் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியின் நேரம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. அவருக்கு சிறியளவிலான சம்பளமே கிடைத்துள்ளது. அவரால் அடிப்படைத் தேவைகளை அடைய முடியவில்லை.

2 பிள்ளைகளின் தந்தையான அமில பெரேரா, பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கை மற்றும் கல்வி வழங்கும் வசதிகளை கூட பெற்றிருக்கவில்லை.

கடந்த 4 வருடங்களாக பிள்ளைகளை காணவில்லை எனவும், வாழ்க்கை மீது விரக்தி ஏற்பட்டுள்ளதாகவும் அமில பெரேரா கூறியுள்ளார்.

கனடாவில் கிட்டத்தட்ட 450 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை நேர்மையற்ற குடியேற்ற ஆலோசகர் நிறுவனங்களிலிருந்து பாதுகாக்க மேலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என NDP உறுப்பினர் Jenny Kwan பெடரல் கனேடிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

குடியேற்ற ஆலோசகர்களினால் இவ்வாறு பல புலம்பெயர் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குறித்த கனேடிய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

-athirvu.com

TAGS: