கைவேலி புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றையதினம் விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் மாவீரர் சு.பா.தமிழ்ச்செல்வன் அவர்களது பத்தாவது வீரவணக்கநிகழ்வு இடம்பெற்றது.
நிழ்வில் கலந்துகொண்ட கட்சியின் செயலாளர் இ.கதிர் நிகழ்வுக்கான பொதுச்சுடரை ஏற்றினார் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.
எமது விடுதலைப்போராட்டத்தின் நோக்கம் சிங்கள இனத்தின் மீதோ அல்லது அவர்களது நிலத்தின் மீதோ மேலாதிக்கம் செலுத்துவதல்ல தமிழர்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவருகின்ற நிலத்தில் தங்களை தாங்களே ஆட்சிசெய்வதற்கான ஒரு உரிமைப்போரையே செய்துவருகின்றோம் என நினைவுரையில் கூறப்பட்டது.
-athirvu.com

























