‘இன்றைக்கு பலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை சிதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.
இது, துரோகமான செயற்பாடாகும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்புக்கு தெற்கில் பேரினவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். வடக்கிலும் சிலர் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். இது, தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பாதிக்கும். வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பலவிதமான இன்னல்களையும் சந்தித்தவர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். தமிழ்க் கட்சிகள் ஒன்றுமையாக செயற்படுமிடுத்து, தென்னிலங்கையுடனும், அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் பேசி, எமது அடைவுகளைப் பெற முடியும்.” என்றுள்ளார்.
-puthinamnews.com