மகாதிர்: நானும்கூட குப்பையைக் கிளற முடியும்

 

இரண்டு-அம்னோ தொடர்புடைய நாளேடுகள் மகாதிருடைய பேத்தியின் ஊதாரித்தனமான வாழ்க்கையை படமிட்டு காட்டியதைத் தொடர்ந்து, தாமும் அவர்கள்மீது சேற்றை வாரி இறைக்க முடியும் என்று அவரது வைரிகளுக்கு மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அரசியல் இது எப்போதுமே ஒரு வியூகமாக இருக்கும் என்று கூறிய அவர், இதன் ஒட்டுமொத்த நோக்கம் 1எம்டிபி மற்றும் ரிம2.6 பில்லியன் போன்றவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகும் என்றார்.

குப்பைகளைத் தோண்டி எடுக்கிறார்கள். நானும் அதைச் செய்ய முடியும் என்று நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் அலுவலகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்துசான் மலேசியா மற்றும் பெரித்த ஹரியான் அவற்றின் முகப்பக்கச் செய்தியாக மகாதிரின் பேத்தியின், மீரா அலியானா முக்கிரிஸின், ஊதாரித்தனமான வாழ்க்கையைப் பற்றி படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன.