’காணாமல் ஆக்கப்பட்டோர்: ஜனாதிபதியின் முடிவுகளில் திருப்தியில்லை’

காணாமல் ஆக்கப்படோர் தொடர்பில், ஜனாதிபதியுடனான சந்திப்பின்  முடிவுகளில் திருப்தியில்லை எனவும் இவ்விவகாரத்துக்கு, சர்வதேச விசாரணையே அவசியம் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர் ​.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (16) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இச்சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள், இவ்வாறு ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம், தனியாகச் சந்திப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது, பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படியே, இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-சண்முகம் தவசீலன்

-tamilmirror.lk

 

TAGS: