கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடித்து, சிகிச்சைப் பெற்றுவரும் அன்வார் இப்ராஹிமை, துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி இன்று சந்தித்தார்.
“வலதுபுற தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அன்வார் இப்ராஹிமை, இப்போதுதான் கோலாலம்பூர் மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்,”என்று தனது டுவிட்டர் மற்றும் முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியோடு, அந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவேற்றியுள்ளார். அவருடன் அவரது துணைவியார் ஹமீடா காசிமும் சென்றிருந்தார்.
நேற்று, பிரதமரும் அவர்தம் துணைவியாரும் அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பரப்புரை ஆரம்பமாகி விட்டதோ!
எலிகள் அம்மணமாக ஓடுகின்றன -ஏன்?
இப்படியும் மக்கள் மணதில் இடம் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையோ.
அவன் அவனின் பாஸ் வெர்ட் சொல்லி சமாதானம் ஆகி விடுவான் ! தமிழன் தான் ! ஜென்ம பகை ! பரம்பரை பகை என்று ! அருவாளை தூக்கி கொண்டு மல்லுக்கு நிப்பான் !!