இளைஞர் மற்றும் விளையாட்டுகள் துறை துணை அமைச்சர் எம். சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் நாளிதழ் அவதுறு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த நாளிதழின் உரிமையாளர் சிட்டி டீம் மீடியா செண்ட். பெர்ஹாட் அந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்தது.
தமிழ் மலர் “போலியான செய்திகளை” உருவாக்குகிறது என்று சரவணன் தெரிவித்தாக கூறப்படும் கருத்து மலேசியாகினி, மக்கள் ஓசை மற்றும் முகநூல் நேரடி நிகழ்ச்சி ஆகியவற்றில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதி அல்லது அவரது ஏஜென்டுகள் அவதூறானவை என்று கூறப்படும் சொற்களை மீண்டும் கூறுவதற்கு தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவுக்கும் வாதி மனு செய்துள்ளார்.
வழக்கு நிர்ணயத்திற்கு டிசம்பர் 18 ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாப்பா எம்பி
தொகுதி சரவணபனுக்கு மீண்டும்பொட்டி
யிட நற்சான்றுதல் வழங்கி விட்டதா?
அலை ஓசை அவர்களே ! கடலே கண்ணுக்கு தெரியவில்லை !
ஆனால் நீங்களோ , அலைகள் கால்களை ஈரமாக்கவில்லை
என புலம்புவது ஏனோ ?
தம்பி மேல அதிகமான புகார்கள் பிரதமர் வரை அனுப்பப் பட்டுள்ளதாக காவல்துறை குருவி கூறியது. அதனுடன் இந்த வழக்கு வந்திருப்பது தம்பியின் சீட்டை குறி வைத்திருக்கும் ம.இ.க. தலைவர்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாகும். அனேகமாக கட்சியின் துணைத்தலைவர் இதனால் பயனடையக்கூடும்.