முற்றுகையிடப்பட்டுள்ள ஜிம்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபேயிக்கு மலேசியா அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று ஹரப்பான் இளைஞர் தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் கூறுகிறார்.
93 வயதான அவர் மலேசியா அல்லது சிங்கப்பூரில் அடைக்கலம் தேடக்கூடும் என்ற ஓன்லைன் செய்திகள் மீது கருத்துரைத்த நிக் இவ்வாறு கூறினார்.
இதில் உண்மை இல்லை என்று நம்புவோம். ஆனால், உண்மையானால் மலேசிய அரசாங்கம் அவருக்கு அவ்வாறு செய்ய அனுமதி கொடுக்கக்கூடாது என்று இன்று மதியம் வெளியிட்ட ஓர் ஊடகச் செய்தில் நிக் கூறினார்.
மலேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிட் அவரை மருத்துவ சிகிட்சைக்காக மலேசியாவுக்கு வர அனுமதிக்கும் என்று கூறியிருந்தது குறித்து நிக் ஏமாற்றம் தெரிவித்தார்.
ஜிம்பாப்வேயில் மக்களாட்சி மலர்வதைத் தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் மலேசியா உதவைக்கூடாது என்று கூறிய நிக், முகாபேயின் விதியை ஜிம்பாப்வேயின் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
1982 -ல் எனக்கு ஹராரேயில் வேலை கிடைத்தது ஆனால் அந்த வேலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை- காரணம் என்னாலங்கு ஒத்து போக முடியுமா என்ற சந்தேகமே. எனினும் ஏற்று கொள்ளாதது நல்லதாக போனது. முகாபே ஒரு உருப்படாத நாட்டை நாச படுத்திய நாதாரி. ஆப்ரிக்கர்களுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்த கையால் ஆகாத ஈனன். மண்டேலாவுக்கு நேர் மாறானவன். வரும் தலை என்ன செய்யுமோ.? காக்கா முகாபேயிற்கு மிகவும் ஆதரவு அளித்தவன்.
என் தாய் தமிழ் அவர்கள் , தனக்கு பிடிக்கதவர்களை
” நாதாரி ” என்றே எப்பொழுதும் சாடுவது வழக்கம் !
ஆனால் இம்முறை ஆப்பிரிக்கா ” முகாபே ” யும் நாதாரி
என்றே சாடுகிறார் . கவனம் ஐயா ! இந்த நாதாரி சொற்களை
தவிர்க முயலுங்கள் ; இல்லையென்றால் ,,,,,,,,,,,,,,,
திருவாளர் ” நாதாரி என் தாய் தமிழ் ” என்றே உங்களை
அடையாள படுத்த வேண்டிய நிலை வரலாம்.
எனக்கு வெறுமனே யாரையும் நாதாரி என்று கூற வேர்த்தா வடிகிறது? ஏன் நாட்டுக்கு நல்லது செய்வேன் என்று கூறி சொந்த சுகத்துக்கு நாட்டை நாற அடித்து மக்களின் வாழ்க்கையை கெடுத்து துன்பத்தின் மடியில் தவழ விடுபவன்களை எப்படி கூறுவது? 1980 ல் நான் இங்கிலாந்தில் இருக்கும் போது எனக்கு ஜிம்பாப்வே நண்பன் இருந்தான் — என்னுடன் வேலை செய்தவன். முகாபேயின் பேரில் எனக்கு மரியாதை இருந்தது காரணம் அப்போது அந்த நாட்டின் சுதந்திர நேரம்–முகாபே அவ்வளவு சிரமமான நேரத்திலும் படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெறஇங்கிலாந்துக்கு வந்தது ஞாபகம் இருக்கிறது. அது மிகவும் பாராட்ட பட வேண்டியது -ஆனால் அதன் பிறகு முகாபே நாட்டை பற்றி அக்கறை படவில்லை. இதற்க்கு மேலும் நான் கூற தேவை இல்லை– நீங்கள் சீமான் பற்றி கூறியதில் உண்மை இருக்கிறது ஆனாலும் சில வேறுபாடுகளிருக்கின்றன. நீங்கள் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் கூறலாம் அதை பற்றி நான் கவலை பட போவதில்லை காரணம் நான் என்ன சொல்கிறேன் என்றுஎனக்கு தெரியும் — என் வாழ் நாட்களில் நான் எப்போதும் பின் புறம் குத்தியது கிடையாது. தமிழ் படங்களில் பார்க்க லாமே முகத்துக்கு முன் ஒன்றும் பின் ஒன்றும் பேசுவது. இதற்க்கு மேலும் தேவை இல்லை என்று நினைக்கிறேன்– பலருக்கு ஆதங்கம் என்ன என்றாலேபுரியாது.
என் தாய் தமிழ் அவர்களே வணக்கம் . உங்கள் கூற்றில் உண்மை
இருக்கலாம் ; மறுக்கவில்லை ! ஆனால் சொற்களில் கவனம் தேவை
என்பதே என் வேண்டுகோள் . செம்பருத்தியில் மூன்று ஆண்டுகளூக்கு
மேலாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் ; ஓரிரு பதிவுகளை
தவிர்த்து மற்ற பதிவுகளில் ” கம்னாட்டி , நாதாரி ” என்ற சொற்கள்
தவறாமல் இடம் பெற்றிருக்கிறது.
மு த நீலாவணன் அவர்களே– என் வார்த்தைகள் கடுமையாக இருக்கவேண்டும் என்றே நான் அவற்றை உபயோகப்படுத்தினேன்– இது ஒரு அதிர்ச்சி வைத்தியம் — பல நேரங்களில் அது தேவை. முன்பு 1967 -க்கு முன்பு பாலஸ்தீன விவகாரம் பலருக்கு தெரியாது ஆனால் லைலா கடத்திய பிரிட்டிஷ் -BOAC – விமானம் அதைமாற்றியது.அதன் பிறகு பல விமான கடத்தல் மற்றவை நான் சொல்லத்தேவை இல்லை– இனிக்க பேசி ஒன்றும் ஆகப்போவது ஒன்றும் இல்ல- இவ்வளவு காலம் ஒத்து ஓதிய MIC -க்கு என்ன கிடைத்தது? நம்மவர்களுக்கு கிடைத்தது நாமம் தானே?