யாழ்ப்பாணம்-உயர்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
யாழ்-உயர்நீதிமன்றில் பாரிய குற்றங்கள் தொடர்பான 50 வழக்குளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளதாக சட்டமா அதிபரிடம் தான் உறுதியளித்துள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் இன்று(4) தெரிவித்துள்ளார்.
யாழ் மேல்நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று(4) கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டடத்திற்காக நீதியமைச்சினால் 242 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ்-உயர்நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்படாத 107 வழக்குகள் காணப்படுவதாகவும், இதில் 50 வழக்குகள் மிகவும் முக்கியமான வழக்குகள் என்பதால் அதற்கான முக்கியதுவம் சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-tamilmirror.lk