உறுப்பினர் அல்ல என்றாலும் அம்னோ பொதுப்பேரவையில் 1எம்டிபி தலைவர் கலந்துகொண்டார்

1எம்டிபி    தலைவர்     அருள்  கண்ட   கந்தசாமி   அம்னோவின்  சிவப்பு    வண்ண  பாஜு   மலாயு   அணிந்து    அம்னோ  பேரவைக்கூட்டத்தில்  கலந்துகொண்டிருக்கும்   படமொன்று   சமூக    வலைத்தளங்களில்   வைரலாகிக்  கொண்டிருக்கிறது.  ஆளும்   கட்சியான  அம்னோவில்   அவர்  சேர்ந்து   விட்டார்   என்ற   கருத்தும்     தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  அருள்   கந்தாவுக்கு   நெருக்கமான   ஒருவர்,   அருள்   அம்னோ  பேராளராகக்  கூட்டத்தில்  கலந்துகொள்ளவில்லை   என்றார்.

“அரசாங்கத்   தொடர்புடைய   நிறுவனத்தின் (ஜிஎல்சி)  தலைவர்   என்ற  முறையில்தான்,   மற்ற   ஜெல்சி   தலைவர்களுடன்   அவரும்   நேற்று   அவர்  அம்னோ   ஆண்டுக்கூட்டத்துக்குச்    சென்றார்.

“அம்னோ  பேரவைக்கூட்டத்தில்   பிஎன்  பங்காளிக்கட்சிகள்,  என்ஜிஓ-க்கள்,  ஜிஎல்சி-கள்,  வெளிநாட்டு  விருந்தினர்கள்  ஆகியோர்   தாராளமாகக்  கலந்துகொள்ளலாம்.

“அருள்   கந்தா    அரசாங்க   ஆதரவாளர்,  ஆனால்  கட்சி   உறுப்பினர்   அல்ல,  கட்சியில்    சேரும்   எண்ணமும்   அவருக்கு  இல்லை”,  என்றவர்  விளக்கினார்.