தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தலைவர் பிரபாகரன் உருவாக்கியதன் நோக்கமே, தமிழர்களின் ஒற்றுமையை ஐக்கியப்படுத்தவே. மக்கள் மத்தியில் மதிப்புகள் – கௌரவங்கள் – ஏதுமற்றுக்கிடந்த இரத்தக்கறை படிந்த – ஆயுதக்குழுக்களை கௌரவ சகவாழ்வுக்கு இட்டுச்சென்ற பெருமை பிரபாகரனையே சாரும். அத்தனைக்கும் அவரிடமிருந்த உறுதியான காரணம் ”நாம் தமிழர்கள்” என்ற ஒற்றுமைக் குடையே!
ஆனாலும், தலைவர் கூட்டமைப்பை உருவாக்குகின்றபோது அதன் தலைவராக தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியை நியமித்தார். அவர் கூட்டமைப்பை உருவாக்கிய பிரபாகரனுக்கே உபதேசம் செய்யவெளிக்கிட, மிகவும் கடுப்புற்ற தலைவர், சம்பந்தனைத் தலைவராகவும் மாவையை செயலாளராகவும் நியமித்தார். எதற்காக? சற்று சிந்தியுங்கள்! அப்போது கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகியன இருந்தனவே. இப்போ சீற்றுக்கு சமபங்கு கேட்பவர்கள் அப்போ பிரபாகரனிடம் கேட்டிருக்கலாமே தமிழரசுக் கட்சிக்கு தலைவர் கொடுத்தால் செயலாளர் தமது கட்சிக்குத் தந்திருக்கவேண்டும் என்று….? இன்று சம்பந்தன் ஐயாவின் மென்போக்கைப் பயன்படுத்தி அதட்டி காரியம் சாதிப்பவர்கள் அன்று பிரபாகரனை அதட்டிக் கேட்டிருக்கலாமே! ஏன் கேட்கவில்லை. நான் சொல்லுறன்’ பயம்’ தான் காரணம். அப்படிக் கேட்டிருந்தால் சங்கரியாரைக் குட்டிப்போட்டு வெளியிலை கலைத்தமாதிரி, இவையையும் குட்டிப்போட்டு வெளியிலை விட்டிருப்பார்.
கூட்டமைப்பின் தலைவர், செயலாளர் ஆகிய இரு முக்கிய பதவிகளையும் – இருநாணயங்களையும் – தலைவர் பிரபா, தமிழரசின் தலைவர்களுக்குக் கொடுத்ததற்கான காரணம் விலைபோகா கொள்கைப்பற்றுள்ள – இனத்தை விற்றுப் பிழைக்காத – தலைமைத்துவத்துக்குரிய தலைவர்களாக – ஒரே கொள்கைப்பற்றுடன் பயணிக்;கக்கூடியவர்கள் தமிழரசுத் தலைவர்கள் என்பதற்காகவே!
இன்று உள்ளூராட்சித் தேர்தலில் பங்கீடு கேட்டு அடிபடுகின்றார்கள். ஆனால், நாங்கள் மக்கள் தொடர்பில் சற்றுச் சிந்திக்கவேண்டும். மக்களும் சிந்திக்கவேண்டும். வலி.தென்மேற்கு பிரதேச சபையில் கடந்த வருடம் உறுப்பினராகவிருந்த கௌரிகாந்தன் என்பவருக்கு புளொட், தமது கட்சிக்கு மானிப்பாய் பிரதேச சபையை எடுத்து அவரை தவிசாளராக்கப் பார்க்குது. உள்ளூராட்சிமன்ற ஆட்சிக்காலம் நான்கு வருடங்களில் 4 தவிசாளரை மாற்றிய பெருமை மானிப்பாய் பிரதேச சபையைச் சாரும். அதற்குக் காரணம் அப்போதைய கௌரவ உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்களே! தனக்கு தவிசாளர் பதவி கிடைக்கவில்லை என்பதற்கான அவர்செய்த அட்டூழியங்களே இவை. அப்படிப்பட்ட ஒரு குழப்பங்காசியை தவிசாளராக்க – புளொட்டுக்கு தமிழரசுக் கட்சி மானிப்பாய் பிரதேசசபையைத் தாரைவார்த்தால் – அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றாகிவிடாது?
அடுத்து வலி.தெற்கைக் கேட்கிறது புளொட். கடந்த ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பான சபை என்ற கௌரவத்தைப் பெற்ற சபையாக வலி.தெற்கு பிரதேச சபை காணப்படுகின்றது. அதன் முன்;னாள் கௌரவ தவிசாளர் பிரகாஷ் தமிழரசுக் கட்சியில் இருக்கும்போது – அவர் தேர்தலில் போட்டியிடும்போது – நாம் அவரைப் புறந்தள்ளி எவ்வாறு வலி.தெற்கை புளொட்டுக்கு வழங்குவது. வலி.தெற்கு மக்கள்தான் அதை ஏற்பரா?
அடுத்து வலி.கிழக்கு, வலி.வெட்டித்துறை ஆகிய சபைகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் உறுப்பினர்கள் தவிசாளர்களாக உள்ள சபைகளாகக் காணப்பட்டன. ஊழல்கள் மிகுந்த சபை என்று கூட்டமைப்புக்கு அகௌரவத்தை ஏற்படுத்திய பெருமையும் அந்தச் சபைகளையே சாரும். வலி.கிழக்கில் பிக் அப் வாகனத்தின் இயந்திரத்தைக் கழற்றி விற்று வழக்கு நடக்கின்ற சபையாக அது காணப்படுகின்றது.
வலி.மேற்கு பிரதேச சபை தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆளுகையின் கீழ் இருந்தது. அங்;கும் தொடர்ந்தும் பிரச்சினைதான்.
இவ்வாறு மாற்றுக் கட்சிகள் ஏற்ற சபைகள் அனைத்தும் பிரச்சினைக்குரியனவாக கடந்த வரலாறுகள் பாடம்புகட்டும்போது எவ்வாறு இவர்களை நம்பி நாம் கூடுதல் சபைகளை வழங்குவது. தலைமைத்துவம், அறிவு, ஆளுமை, சாணக்கியம், மதிநுட்பம் ஆகிய பஞ்ச அம்சங்களும் அற்றவர்களுக்கு எவ்வாறு சபைகளை வழங்குவது. மக்கள் எம்மைக் காறித் துப்பார்கள்!
தீவுப் பகுதி அனைத்தையும் ரெலோ கேட்கிறார்கள். தீவுப்பகுதி முழுவதையும் ஆயுதக் குழுவுக்கு வழங்கினால் அங்குள்ள மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாக அது அமையாதா?
எமது கட்சி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்கள். வேலியிலை போற ஓனாயை வில்லங்கமாகப் பிடித்து மடியிலை கட்டிப்போட்டு அது குத்துது குடையுது என்று புலம்புவதற்கு நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்லரே! போபவர்களை விட்டுவிட்டு, நாம் தமிழரசாகத் தனித்துநின்று எமது பலத்தை இந்தப் பச்சோந்திகளுக்கும் தென்னிலங்கைக்கும் சவர்வதேசத்துக்கும் நிரூபிப்போமாக!
தெல்லியூர் சி.ஹரிகரன்
-tamilcnn.lk