அடுத்த ஆண்டு கட்சித்தேர்தல்களின்போது அம்னோ தலைவர் பதவிக்கும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி இருக்கக்கூடாது என்ற தீர்மானம் அம்னோவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்னோ இளைஞர் பிரிவு கொண்டுவந்த தீர்மானம் அம்னோ பொதுப் பேரவையில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி இல்லை என்றால் கட்சி 14வது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும் என்பதால் அவ்வாறு செய்யப்பட்டது.
2009-இல் அம்னோ தலைவர் ஆனதிலிருந்து நஜிப் அப்துல் ரசாக்குக்கு இதுவரை கட்சியில் போட்டி எழுந்ததில்லை.
2009-இலும் 2013-இலும் போட்டியின்றியே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016இல் கட்சித் தேர்தல்கள் நடந்திருக்க வேண்டும். பொதுத் தேர்தலை முன்னிட்டு அவை தள்ளிவைக்கப்பட்டன.